விஜய்க்காக 100 ஜிமெயில் அக்கவுண்ட்கள்...!தளபதியின் தீவிர வெறியனான பிரபல நடிகையின் மகன்...!
தமிழ் சினிமாவில் மாஸான நடிகராக இருந்து வருகிறார் நடிகர் விஜய். இவருக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கின்றன. மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவர் மீது அளாவதியான பாசத்தை கொட்டி வருகின்றனர்.
நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் பாதி முடிவடைந்த நிலையில் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தை பற்றிய புது புது அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் பிரபல நடிகையான ரோஜாவின் மகன் கௌசிக் விஜயின் தீவிர ரசிகன் என அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நிரூபித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் எம்.எல்.ஏ வாக இருக்கும் ரோஜா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகையாக வலம் வந்தார். இப்போது அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார்.
அவரின் மகன் தான் கௌசிக். விஜயின் எந்த பட டிரெய்லர் வந்தாலும் 10,000 தடவை பார்ப்பாராம். அதற்காக 100 ஜிமெயில் அக்கவுண்ட்கள் கௌசிக் வைத்துள்ளாராம். ஒவ்வொரு தடவை டிரெய்லர் வரும் போதும் இருக்கிற எல்லா அக்கவுண்ட்களில் இருந்தும் லைக்ஸ், சப்ஸ்க்ரைப், ஸேர் செய்வாராம். இதை கேட்ட அனைவரையும் ஆச்சரியப்பட்டனர்.