கோட் படம் ரிலீசாகும் தியேட்டர்களில் நகராட்சி செய்த சம்பவம்!.. அரசியல்தான் காரணமா?

by சிவா |
goat
X

goat

Vijay Goat: சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது. ஏனெனில் இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சினிமாவில் பிரபலமாகிவிட்டு சிலர் அரசியலுக்கு வந்து ஆட்சியையே பிடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, என்.டி.ஆர் போன்றோர்களை உதாரணமாக சொல்ல முடியும்.

முதல்வராகவில்லை என்றாலும் நடிகர்கள், நடிகைகள் பலரும் அரசியலில் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இது தொடார்ந்து கொண்டேதான் இருக்கும். அதேசமயம், சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைப்படும் முக்கிய நடிகர்கள் அரசியல்ரீதியாக பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

இதையும் படிங்க: கோட் ஃபீவர் ஸ்டார்ட்!.. நாம போட்டோக்களை எறக்கணும்!.. அஜித்தை பங்கம் பண்ணிய பிரபலம்!…

பாபா படம் வெளியான போது அப்படத்தின் பிக்சர் பொட்டியை தூக்கி கொண்டு ஒரு அரசியல் கட்சியினர் ஓடினார்கள். அரசியல்ரீதியாக கருத்து சொன்னார் என்பதற்காக கமலின் விஸ்வரூபம் படத்தை வெளியிடவிடாமல் தடுத்தார்கள். ரஜினி, கமலை விட இதில் அதிகம் பாதித்தது நடிகர் விஜய்தான்.

விஜயின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. Time to lead என கேப்ஷன் போட்டதற்காக தலைவா படம் தமிழகத்தில் 2 நாட்கள் வெளியாகவில்லை. சர்கார் படத்தில் வில்லி கதாபாத்திரத்தற்கு வைத்த பெயரால் தியேட்டரில் பேனர்களை ஒரு அரசியல்கட்சியினர் கிழித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி தொடர்பாக விஜய் ஒரு வசனம் பேசியதற்காக நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த அவரை காரில் ஏற்றி சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இது எல்லாம்தான் விஜய்க்கு கோபத்தை ஏற்படுத்தி அவரை அரசியலுக்கு வர வைத்தது என்றும் சொல்லலாம்.

goat

#image_title

இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகி வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகவுள்ள கோட் படத்திற்கும் பிரச்சனைகள் துவங்கிவிட்டது. சென்னையில் காசி உள்ளிட்ட சில தியேட்டர்களில் கோட் படத்தின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள் இங்கு ஃபிளக்ஸ் மற்றும் பேனரெல்லாம் வைக்கக் கூடாது என சொல்லி அவற்றை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.

இதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. விஜயின் கட்சி மாநாடு விரைவில் நடக்கவுள்ளதால் இன்னும் பல பிரச்சனைகளை அவர் சந்திப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கோட் ரிலீஸாக இருக்கு… திடீரென மகாராஷ்ட்ரா ஜூட் விட்ட விஜய்.. என்ன சேதி?

Next Story