Cinema News
நான் பண்றனோ இல்லையோ.. நீ நல்லா பண்றே!.. உதயநிதியிடம் உருட்டிய விஜய்!….
நடிகர்கள் எப்போதும் அரசியல்வாதிகளிடம் மிகவும் ஜாக்கிரதையாக பழகுவார்கள். ஏனெனில், தங்களின் படங்களுக்கு அரசியல்ரீதியாக எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என நினைப்பார்கள். அரசியல் தொடர்பு உள்ளவர்கள் படங்களை தயாரிக்க வந்தால் அவர்களுக்கு சிலர் கால்ஷீட் கொடுக்க மாட்டார்கள். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்க விரும்பிய போது ரஜினி கால்ஷீட் கொடுக்கவில்லை.
உதயநிதி தமிழ் சினிமா துறையில் தயாரிப்பாளராகத்தான் அறிமுகமானார். இவரின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்த முதல் படத்திலேயே விஜய்தான் ஹீரோ. அப்படி உருவான படம்தான் குருவி. 2008ம் வருடம் இப்படம் வெளியானது. இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதோடு, உதயநிதிக்கும், விஜய்க்கும் இப்படம் மூலம் மனக்கசப்பும் ஏற்பட்டது.
இதையும் படிங்க: வாசல் வரைக்கும் வந்த மகாலட்சுமியை திருப்பி அனுப்பிய நடிகர்! ‘மகாராஜா’ படத்தில் இவர் நடிக்க வேண்டியதா?
இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய உதயநிதி ‘குருவி படம் உருவான போது எங்கள் இருவருக்கும் இடையில் சிலர் விளையாடி விட்டனர். அதனால், நாங்கள் சரியாக பேசிக்கொள்ளவில்லை. ஆனால், இருவரும் அமர்ந்து அது பற்றி பேசி தெளிவாகி விட்டோம். அதோடு அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது’ என சொன்னார் உதயநிதி.
விஜய் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த நிலையில் அவரின் படம் தொடர்பான விழாவை நேரு விளையாடு அரங்கில் நடத்த அரசு அனுமதிக்கவில்லை. இதற்கு பின்னணியில் உதயநிதி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்போது உதயநிதி அமைச்சராக இருக்கிறார். விஜயோ விரைவில் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்.
நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானபின் விடுதலை சிறுத்தை மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு வாழ்த்து சொன்ன விஜய் திமுகவுக்கு சொல்லவில்லை. இது சமூகவலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், ‘உங்களுக்கும் விஜய்க்குமான உறவு இப்போது எப்படி இருக்கிறது?’ என்கிற கேள்வி உதயநிதியிடம் வைக்கப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன உதயநிதி ‘இப்போது இருவரும் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், எங்கள் குடும்பத்தின் விழா ஒன்றுக்கு வந்த விஜய் ‘ஒரு அரசியல்வாதியா நீ நல்லா பண்றே’ என என்னை பாராட்டினார். அதுதான் அவரை நான் கடைசியாக பார்த்தது’ என சொன்னார்.