ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள புக்கெட் ஜல்லில் மைதானத்தில் நடந்த போது விஜயுடன் நெருக்கமாக இருந்தவர் டத்தோ மாலிக். விஜய் விமானத்திலிருந்து இறங்கியது முதல் விழா முடிந்து அவர் விமானம் ஏறும் வரை உடனிருந்தார் டத்தோ மாலிக். அதுமட்டுமல்ல.

மேடையில் பேசிய விஜய் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த மாலிக்குக்கு நன்றி எனவும் கூறியிருந்தார். உண்மையில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் இந்த டத்தோ மாலிக்.
Also Read

பிழைப்பதற்காக மலேசியா சென்றவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். துவக்கத்தில் ஒரு ஜவுளிக்கடை வேலையில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து தற்போது மலேசியாவில் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மாறியிருக்கிறார்.

சினிமா பிரபலங்கள் மற்றும் இசையமைப்பாளர்களை வைத்து மலேசியாவில் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேலும் சினிமா, நகை வியாபாரம் உள்ளிட்ட பல தொழில்களிலும் முதலீடு செய்திருக்கிறார்.

ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை வாங்கி மலேசியாவில் வெளியிடுவதும் இவர்தான். விஜயின் மாஸ்டர், லியோ, கோட் போன்ற படங்களை கூட மலேசியாவில் வெளியிட்டது இவர்தான். ஜனநாயகன் படத்தையும் அவர்தான் வெளியிடுகிறார்.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவிற்காக விஜய் மலேசியா சென்ற போது டத்தோ மாலிக் புதிதாக கட்டியிருந்த ஒரு பிரம்மாண்டமான பங்களாவை விஜய் திறந்து வைத்தார். அது தொடர்பான புகைப்படங்களை மாலிக் தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.



