
Cinema News
தம்மாதூண்டு விஷயத்திற்கு பயந்த விஜய்..! இயக்குனரிடம் திட்டு வாங்க வைத்த லக்கி நடிகை..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். ஆரம்பகாலங்களில் தன் அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துக் கொண்டு வந்தார். கிட்டத்தட்ட 10 படங்களுக்கு பிறகு தான் நிலையான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தாலும் தன் தந்தை இயக்கத்தில் உருவான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம்தான் இவரை ஒரு முதன்மை நடிகராக சினிமா பார்க்க தொடங்கியது. இந்த நிலையில் இவருடன் அதிகமான படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை சங்கீதா. ஏராளமான படங்களில் நடித்து அந்த படங்களும் நல்ல வரவேற்பையே பெற்றது. அதன் மூலம் விஜய் மற்றும் சங்கீிதாவை சினிமாவில் அதிர்ஷ்டாசாலியான ஜோடி என்றே அழைக்கத் தொடங்கினர்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ரசிகன் என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தன் அப்பாக்கு தெரியாமல் யுனிட்டோடு சேர்ந்து கார்ட்ஸ் விளையாடுவாராம். ஒரு சமயம் அந்த படத்திற்கான காட்சிகள் படமாக்கிக் கொண்டிருக்கும் போது சங்கீதாவால் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் விஜய் திட்டு வாங்கினாராம்.
அதாவது ஒரு குளிர்ச்சியான குளத்தில் குளிக்கும் மாதிரியான காட்சியாம் ரசிகன் படத்தில். சங்கீதா உடனே இறங்கி விட்டாராம். விஜயையும் இயக்குனர் இறங்க சொன்னாராம். ஆனால் விஜய் தண்ணீ ரொம்ப குளிருதுனு யோசித்தாராம். அதற்கு சந்திரசேகர் ”அந்த பொண்ணே இறங்கிடுச்சு உனக்கென்ன?” என திட்டுனாராம். விஜய் உடனே சங்கீதாவை உன்ன யாரு முதலில் இறங்க சொன்னது என்று கோபமாக கேட்டாராம்.