விஜய்சேதுபதி வாங்கி கொடுத்த வாய்ப்பு.. டேக்ஆப் ஆகிய விமல்.. அதுமட்டும் நடக்கலனா!..

by சிவா |   ( Updated:2023-02-13 06:02:23  )
vijay sethupathi
X

vijay sethupathi

திரையுலகை பொறுத்தவரை பலரும் நடிக்க வாய்ப்பு தேடுவார்கள். ஆனால், வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. தயாரிப்பாளரோ, இயக்குனரோ அல்லது நடிகர்களோ அல்லது சினிமா தொடர்புடைய நபர்களோ சிபாரிசு செய்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். இப்படித்தான் பல நடிகர்கள் உருவானார்கள். பலருக்கு நன்றாக நடிக்கும் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமலே போய்விடும்.

Actor Vijay Sethupathi

தற்போது பல படங்களில் நடித்து பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் சேதுபதி துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் பல படங்களில் நடித்தவர். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ படத்தில் கூட கூட்டத்தில் ஒருவராக நடித்திருப்பார். அப்படி நடித்துதான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். நண்பர்கள் மூலம் இவர் வளர துவங்கினார்.

அதேபோல், இவரும் தன்னுடையை நண்பர்கள் பலரையும் சினிமாவில் வாழ வைத்துள்ளார். கஷ்டப்படும்போது உதவிய பல நண்பர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்போதும் அதை செய்து வருகிறார். கூத்துப்பட்டறையில் விஜய்சேதுபதியுடன் நடிப்பு பயிற்சி எடுத்தவர்களில் நடிகர் விமலும் ஒருவர்.

vimal

vimal

விமலும் போராடிதான் சினிமாவுக்கு வந்தார். நடிகர் சசிக்குமார் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பசங்க. இந்த படத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதியைத்தான் அணுகியுள்ளனர். அவர் விமலை தொடர்பு கொண்டு ‘இந்த கதாபாத்திரம் உனக்கு பொருத்தமாக இருக்கும். நீ போய் அவர்களை பாரு’ எனக்கூறியுள்ளார். அதன் பின்னரே அப்படத்தில் நடிக்க விமலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுதான் அவரின் முதல் படம். அதன்பின் களவாணி திரைப்படத்தின் வெற்றி அவரை மேலும் வளர உதவியது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை நடிகர் விமலே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரும் சிவாஜியும் பெண் வேடத்தில் கலக்கிய திரைப்படங்கள்… ஆனால் இதில் சோகம் என்னன்னா!!

Next Story