விஜய்சேதுபதி எடுத்த திடீர் முடிவு!.. அடுத்த படம் அந்த பிரபல இயக்குனருடனா?!.. இதுவும் நாவல் படமா?...

vijay sethupathi
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் அசர வைத்தவர். இந்த கதாபாத்திரம் தான் இன்று இல்லாமல் ஹீரோவாக, வில்லனாக, அப்பாவாக என அனைத்து ஜானரிலும் கலக்கக்கூடிய ஒரு சிறந்த நடிகர்.
இதையும் படிங்க: Dhanush: இவர் இருக்கிற தைரியத்துலதான் இந்த கபடி ஆட்டமா? ‘போர்த்தொழில்’ இயக்குனரை பலியாடாக மாற்றிய தனுஷ்
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மகாராஜா. நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டு கொடுத்தது. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும், தற்போது சீனாவிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தனது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார். மகாராஜா திரைப்படத்திற்கு பிறகு ஏஸ், ட்ரெயின், காந்தி டாக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை 2 திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

vijay sethupathi
அடுத்ததாக பாண்டியராஜன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இப்படி தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
படத்தின் கதையை மாரி செல்வராஜ் விஜய் சேதுபதியிடம் கூறியதாகவும், அதற்கு விஜய் சேதுபதி ஒப்புதல் வழங்கி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் மாரி செல்வராஜ் தற்போது பைசன் என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இதை தொடர்ந்து நடிகர் கார்த்தி அவர்களை வைத்து ஒரு புதிய திரைப்படத்தையும் இயக்கப் போகின்றார்.
இப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் மகாராஜா, விடுதலை போன்ற திரைப்படங்களுக்கு கிடைத்த வெற்றியைப் பார்த்த விஜய் சேதுபதி ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கின்றார். இனிமேல் பிறருக்காக இல்லாமல் ஒவ்வொரு திரைப்படத்தின் கதையையும் தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்து இருக்கின்றாராம்.
இதையும் படிங்க: Jayam Ravi: வில்லனாக நடிக்க இத்தனை கோடியா? சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க இதான் காரணமா?
படத்தின் கதை தனக்கு பிடித்து அதில் முக்கியத்துவம் இருக்கும் பட்சத்தில் அதில் மட்டுமே நடிக்க இருப்பதாகவும், நட்புக்காக படத்தில் நடிப்பதை இனி தவிர்க்க இருப்பதாக கூறப்படுகின்றது. அப்படி பார்த்தால் இனிமேல் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று அவரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.