லியோ படத்தில் இணையும் விஜய் சேதுபதி!.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!….

by சிவா |   ( Updated:2023-04-05 12:03:33  )
lokesh
X

lokesh

மாநகரம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் ரசிகர்களிடமும் கவனம் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் லோகேஷ் கனகராஜ் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் என நிரூபித்தது. ஏனெனில், இது போன்ற கதையை தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்தது கிடையாது.

எனவே, விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அப்படி அவர் இயக்கிய படம்தான் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் ஹீரோவாகவும், அவருக்கு இணையான வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். இந்த படமும் மாபெரும் ஹிட் அடித்தது.

ஆனால், கமலை வைத்து லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் லோகேஷ் கனகராஜை பெரிய இயக்குனராக மாற்றிவிட்டது. இந்த திரைப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் மெகா வெற்றிக்கு பின் மீண்டும் விஜயை வைத்து லியோ என்கிற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

leo
leo

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது. இப்படத்தில் விஜயுடன் திரிஷா, பிரியா ஆனந்த், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பாபு ஆண்டனி, அர்ஜூன் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது. மாஸ்டர், விக்ரம் என இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதி நடித்த நிலையில் லியோ படத்திலும் விஜய் சேதுபதி நடிப்பாரா என்கிற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால், இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என லோகேஷ் கூறிவிட்டார்.

vijay sethupathi

இந்நிலையில், லியோ படத்தில் விஜய் சேதுபதி இணையவுள்ளார். ஆனால், நடிகராக இல்லை. இப்படத்திற்காக மூன்று நாட்கள் டப்பிங் மட்டும் பேசி கொடுங்கள் என அவரிடம் லோகேஷ் கேட்டுள்ளாராம். ஓவர்லாப் வாய்ஸில் இப்படத்தை பற்றி டைட்டிலிலோ இல்லை ஏதோ ஒரு இடத்திலே விஜய் சேதுபதி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இதுவரை இல்லாத கெட்டப்பில் அர்ஜூன்!.. லியோ படத்துல சிறப்பான சம்பவம் இருக்கு!..

Next Story