More
Categories: Cinema News latest news

பாலிவுட்டால் கதிகலங்கிய கோலிவுட் நடிகர்கள்! லெஃப்ட் ஹேண்டில் கையாண்ட மக்கள் செல்வன்

Actor Vijaysethupathi: சமீபகாலமாக ஹிந்தியை திணிக்க கூடிய செயல் தமிழ் நாட்டில் நடந்து வருகிறது. தமிழர்களை பொறுத்தவரைக்கும் ஹிந்தியை எதிர்க்கவில்லை.  ஆனால் தங்கள் மேல் அந்த மொழியை திணிப்பதைத்தான் எதிர்க்கிறார்கள். இது ஒரு பொதுவான விஷயமாக பார்க்கப்பட்டாலும் சினிமா துறையிலும் இது சம்பந்தமான பல பிரச்சினைகள் ஒரு சில பிரபலங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அண்மையில் கூட விஜய் சேதுபதியிடம் ஹிந்தி குறித்து ஒரு கேள்வி கேட்கப்ப்ட்டது. விஜய்சேதுபதி ஹிந்தியில் ஸ்ரீராம் இயக்கத்தில் மேரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக காத்ரீனா கைஃப் நடித்திருக்கிறார். அந்தப் படம் தமிழிலும் எடுக்கப்பட்டிருப்பதால் பட ப்ரோமோஷனுக்காக படக்குழு சென்னையில் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

Advertising
Advertising

இதையும் படிங்க: பாடல்களே இல்லாமல் ஹிட் அடித்த திரைப்படங்கள்! ஒரே இரவில் பின்னி பிடலெடுத்த ‘கைதி’ய மறக்க முடியுமா?

அப்போது ஒரு நிருபர் விஜய் சேதுபதியிடம் ,  ‘ நாங்கள் ஹிந்தி போடானு சொல்லிட்டு இருக்கோம். ஆனால் நீங்கள் ஹிந்தி படத்துல நடிக்கிறீர்கள் ?’என்பது மாதிரியான ஒரு கேள்வியை கேட்க, அதற்கு விஜய் சேதுபதி ‘ஒரு நடிகனிடம் இந்த கேள்வியை கேட்டு என்னாக போகிறது? ஆனால் இதே கேள்வியை அமீர்கான் வரும் போதும் கேட்கிறீர்கள். இது தேவையில்லாத கேள்வி. இந்தியை இங்கு யாரும் எதிர்க்கவில்லை. நிறைய பேர் இந்தி படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். படிப்பதற்கும் திணிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.’ என சொல்லிவிட்டு சென்றார்.

இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் சுபேர் அவரது கருத்தை கூறினார். அதாவது ஒரு நடிகர் ஹிந்தி படத்தில் நடிக்கிறார் என்றால் அவருக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். அதற்கு நடித்துக் கொடுக்கிறார். நடித்ததனால் ஹிந்தியை கொண்டு வந்து விடவா போகிறார்? அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நெப்போட்டிசம் அதிகமாகவே இருக்கிறது.

இதையும் படிங்க: தன் வழக்கமான பாணியையே பிரேக் செய்து வெற்றிகண்ட விஜயகாந்த்! இந்த படத்துல இவ்ளோ விஷயம் இருக்கா?

சிவாஜி காலத்தில் இருந்தே இருக்கிறது. அப்போதைய சூப்பர் ஸ்டார் திலீப் குமாரே சிவாஜியின் புகழை கண்டு எங்கே பாலிவுட்டிற்கு சிவாஜி வந்துவிடுவாரோ என்ற பயத்தில் இருந்தாராம். அதனால் சிவாஜியால் ஹிந்தியில் கால்பதிக்க முடியவில்லை. அதே போல் கமலும் ஒரே ஒரு ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறார். ஏக் துஜே கேலியே என்ற அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட். இருந்தாலும் அதன் பிறகு கமல் ஹிந்தி பக்கமே வர முடியவில்லை.

அதே போல் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனிலும் ரஹ்மானை அந்தப் படத்தின் ஒரு பாடலை ஹிந்தியில் பாடச் சொல்லி மும்பை பத்திரிக்கையாளர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால் எனக்கு ஹிந்தி தெரியாது என தமிழில்தான் பாடினார் ரஹ்மான். இந்த வரிசையில் சித்தார்த்தும் சிக்கினார்.

இதையும் படிங்க: கண்ணதாசன் வாழ்வில் அதிசயத்தை நிகழ்த்திய பாடல்!.. கவிஞர் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்திருக்கா!..

அதனால் விஜய்சேதுபதிக்கும் தமிழ் பத்திரிக்கையாளரால் அந்த ஒரு தொல்லையை கொடுக்க நினைத்தார்கள். ஆனால் விஜய் சேதுபதி அவரை ஒரே ஒரு கேள்வியால் சம்பவம் செய்து விட்டு சென்றார் என சுபேர் கூறினார்.

Published by
Rohini

Recent Posts