விஜய்சேதுபதிக்கு இன்ஸ்பிரேஷன் இந்த விஜய் டிவி பிரபலமா? அதான் இந்தளவுக்கு பேசுறாரா?

by Rohini |   ( Updated:2024-01-17 11:16:13  )
vijayse
X

vijayse

Actor Vijaysethupathi: தமிழ் சினிமாவில் புகழ்மிக்க நடிகராக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் விஜய்சேதுபதிக்கு ரசிகர் பட்டாளம் ஏராளமாக இருக்கிறார்கள்.

பக்கத்து வீட்டு நண்பராக, உறவினராக பழகும் தன்மை கொண்ட விஜய்சேதுபதியை பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். வாழ்க்கை அவருக்கு கற்றுக் கொடுத்த பாடம் அவர் பேச்சிலிருந்தே நம்மால் அறிய முடியும். அந்தளவுக்கு தெளிவான கருத்துக்களை முன்வைத்துப் பேசக் கூடியவர் விஜய்சேதுபதி.

இதையும் படிங்க: ராமமூர்த்திக்கும் பாதி கொடுங்க!… வாங்குன சம்பளத்தை பங்கு போட்ட எம்.எஸ்.வி… இப்படியும் ஒரு மனுஷனா!…

என்ன வேண்டும்? வேண்டாம், என பிரித்து பகுத்தறியும் திறன் கொண்டவராகவும் விளங்குகிறார் விஜய்சேதுபதி. இந்த நிலையில் நடிகரும் ஆங்கருமான ரியோ சமீபத்தில் கோபிநாத் 25 விழாவிற்கு சென்றிருந்தார்.

விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர் கோபிநாத். அவர் இந்த துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி இந்த விழாவை கொண்டாடினார்கள். அதற்கு நடிகர் ரியோவும் அழைக்கப்பட்டார். அப்போது மேடையில் ஏறி பேசிய ரியோ கோபிநாத்தை பற்றி சில விஷயங்களை கூறினார்.

இதையும் படிங்க: திரைப்படம் வேணாம்.. புகைப்படம் போதும்! போட்டோவை போட்டு இளசுகளை உசுப்பேத்திய மாளவிகா

கோபிநாத்தை விஜய் சேதுபதிக்கு அறிமுகம் செய்து வைத்ததே ரியோதானாம். அதாவது ஒரு விழாவிற்கு வந்திருந்த விஜய்சேதுபதியை பார்த்ததும் கோபிநாத் ரியோவிடம் ‘விஜய் சேதுபதி கிட்ட பேசனும். ஆனால் தயக்கமாக இருக்கிறது. அவர் பேச்சு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.’ என கூறினாராம்.

உடனே ரியோ விஜய்சேதுபதியிடம் ‘உங்ககிட்ட கோபிநாத் பேசனும்னு ஆசைப்படுகிறார்’ என்று சொன்னதும் அதற்கு விஜய்சேதுபதி ‘ நானே பேசனும்னுதான் இருந்தேன். எனக்கும் தயக்கமாக இருந்தது. அவர் பொதுமேடையில் பேசுகிற பேச்சை கேட்டுத்தான் நானும் இந்தளவுக்கு பேச கற்றுக்கொண்டேன்’ என்று கூறியதாக ரியோ தெரிவித்தார்.

இதையும் படிங்க: அந்தப் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த அஜித்! படமோ ப்ளாக் பஸ்டர் ஹிட்

Next Story