ஷங்கர் கொடுத்த மாஸ் எண்ட்ரி..ஆனால் சிம்பிளாக மறுத்த விஜய்...ஏன் தெரியுமா?...
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்த பல யுக்திகளை செய்வார்கள், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர் வெளியிடுவது என வெளியிட்டு புரமோஷன்களை செய்வார்கள்.
அதேபோல், படப்பிடிப்பு முடிந்து படம் தயாராகும் நிலையில் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவார்கள். அதிலும் பெரிய நடிகர் படம் என்றால் சொல்லவே தேவையில்லை. விழாவுக்கு பல லட்சங்களை இறைத்து செலவழிப்பார்கள். அதிலும், இயக்குனர் ஷங்கர் என்றால் அது வேற லெவலில் இருக்கும்.
திரைப்படங்களை பிரம்மாண்டமாக எடுக்கும் இவர் இசை வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாகவே நடத்துவார். விக்ரமை வைத்து இவர் இயக்கிய ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டை வரவழைத்து அசத்தினார். அதேபோல், விஜயை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் நண்பன். இப்படத்தில் விஜயுடன் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்தியராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: செதுக்கி வச்ச சிலைய விட நீ தாறுமாறு!…நடிகையின் கட்டழகில் கிறங்கிப்போன நெட்டிசன்கள்…
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த போது 30 அடி உயர கூண்டில் இருந்து விஜய் இறங்கி வரும்படி செட் போட்டிருந்தார்களாம். ஆனால், சக நடிகர்களான ஜூவா, ஸ்ரீகாந்துக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். இப்படத்தை பொறுத்தவரை நாங்க மூணு பேரும் ஒண்ணுதான். எனவே, எனக்கு மட்டும் தனியாக பில்டப்பெல்லாம் வேண்டாம். அவர்கள் எந்த வழியாக மேடைக்கு வருகிறார்களோ அப்படியே நானும் வருகிறேன்’ எனக்கூறி விஜய் அவர்களோடுதான் மேடையேறினாராம் விஜய்.