அப்பாவுக்காக பொங்கிய குட்டி தளபதி...! ரசிகர்களுக்கு வேண்டுகோள்...வைரலாகும் ட்விட்டர் பதிவு...
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் சேர்ந்து சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு உட்பட பலரும் நடிக்கின்றனர்.
படம் ஒரு கமெர்ஷியல் படமாக அமைய இருக்கிறதாம். நீண்ட நாள்களுக்கு பிறகு ஃபேமிலி சப்ஜெக்டில் விஜய் திரும்பவும் நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் இந்த படத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் லீக் ஆகி படக்குழுவினரை பெரிதும் காயப்படுத்தியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு விஜயின் மகன் சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் தயவுசெய்து வாரிசு படத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை பகிராதீர்கள் என்று ரசிகர்களுக்கு அன்பான கோரிக்கையை விடுத்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவுதான் இப்போது வைரலாகி வருகின்றது.
விஜயின் மகன் சஞ்சய் கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்புகளை முடித்து விட்டு சமீபத்தில் தான் இந்தியா திரும்பினார். மேலும் மகனுக்கு பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் நூல் விட்டும் பயனில்லாமல் போய்விட்டது. ஏனெனில் இப்பொழுது சஞ்சய் சினிமா பக்கம் வர வாய்ப்பில்லை என்று விஜய் கூறியதாக தகவல்கள் வெளியானது.