Connect with us
goat

Cinema News

‘கோட்’ படத்திற்கு சூனியம் வைத்துக்கொண்ட விஜய்!.. எப்பவோ பேசினது இப்ப ஏழரை ஆயிடுச்சே!..

Goat: மாநாடு ஹிட் கொடுத்த வெங்கட் பிரபுவுடன் கை கோர்த்திருக்கிறார் நடிகர் விஜய். எனவே, கோட் படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே வெளியான தகவல்படி இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அதில், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் இளமையாக காட்டவுள்ளனர்.

ஏற்கனவே இது தொடர்பான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஒரு பக்கா ஆக்‌ஷன், செண்டிமெண்ட் கதையாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜயுடன் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இதையும் படிங்க: தம்பி ஓரமா போ!.. சிவகார்த்திகேயனை ஓவர்டேக் செய்த தனுஷ்!.. கேப்டன் மில்லர் வசூல் நிலவரம்…

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான், ஹாங்காக், தென் ஆப்பிரிக்கா என பல நாடுகளிலும் நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டிருக்கிறார். அதேபோல், இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இலங்கையில் உள்ள ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எடுக்கப்படவுள்ளது. வெங்கட்பிரபு சமீபத்தில் இலங்கை சென்று அந்த இடத்தையும் பார்த்து வந்தார்.

goat

ஆனால், அங்கு கோட் படத்தின் படப்பிடிப்பு சுமூகமாக நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. விஜய் சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் இலங்கை படுகொலைக்கு எதிராக நடிகர் சங்கம் சார்பில் ஒரு போரட்டம் நடந்தது. அதில் பேசிய விஜய் ‘உலக வரைபடத்திலிருந்து இலங்கையை இல்லாமல் செய்ய வேண்டும்’ என சற்று உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: போஸ்டர் காசு கூட வரல!.. புலம்பும் திரையுலகம்!.. வசூலில் மண்ணை கவ்விய அயலான்!..

விஜய் இப்போது படப்பிடிப்புக்காக இலங்கை வருவதை தெரிந்துகொண்டு அவர் அப்போது பேசிய வீடியோவை மட்டும் கட் பண்ணி அதை சிங்கள மொழியில் மொழி மாற்றம் செய்து சமூகவலைத்தளங்களில் சிலர் பரப்ப அந்த வீடியோ அங்கு வைரலாகி விஜய்க்கு எதிராக ஒரு நெகட்டிவ் சக்தி உருவாகி வருகிறதாம்.

இது கோட் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடக்கும்போது ஏழரையை கொண்டுவருமா என்பது தெரியவில்லை. எப்படியாவது அங்கு கிளைமேக்ஸ் காட்சியை எடுக்க வெங்கட்பிரபு திட்டமிட்டிருக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: மௌனம் சாதிக்கும் கமல்!… விஜய் சேதுபதி, யோகி பாபு பக்கம் சாய்ந்த ஹெச்.வினோத்…

google news
Continue Reading

More in Cinema News

To Top