வலிமைய விட அதிகமா வேணும்!....ஆர்டர் போட்ட விஜய்... இதுலாம் ஒரு பெருமையா பாஸ்...

by சிவா |
valimai
X

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய்க்கும் அஜித்துக்கும் இடையே எப்போதும் ஒரு பனிப்போர் உண்டு. அஜித் படம் பற்றி அறிவிப்பு ஒன்று வெளியாகி எல்லோரும் அதை பேசினால், விஜய் படம் தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகும்.

இதையே அஜித்தும் செய்வார். அதேபோல், விஜயின் படத்தை தன்னுடைய படம் அதிகம் வசூலிக்க வேண்டும் என அஜித்தும், அஜித் படத்தை விட தன்னுடைய படம் அதிக வசூலை பெற வேண்டும் என விஜயும் நினைப்பதுண்டு.. இடையில் அல்லாடுவது பாவம் அவர்களின் ரசிகர்கள்தான்.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் 2 சாதனைகளை செய்துள்ளது. ஒன்று, இதுவரை இந்திய சினிமாவில் அதிகமான தியேட்டர்களில் வெளியான திரைப்படம் இது எனக்கூறப்படுகிறது. 900 தியேட்டர்கள் என்கிறார்கள் சிலர்.

valimai

ஆனால், இப்படம் 650 தியேட்டர்களில்தான் வெளியானது என விபரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும். அடுத்து, முதல் நாள் அதிக வசூல் பெற்ற திரைப்படம் வலிமை எனவும் கூறுகின்றனர். தமிழகத்தில் ரூ.34.5 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதையும் சிலர் மறுக்கிறார்கள்.

இந்நிலையில், வலிமை படம் வெளியானதை விட தன்னுடைய பீஸ்ட் திரைப்படம் அதிக தியேட்டர்களில் வெளியாக வேண்டும் என விஜய் ஆர்டர் போட்டுள்ளாராம். அப்போதுதான் முதல் நாள் வசூல் வலிமை படத்தை முறியடிக்கும் என அவர் நினைக்கிறாராம்..

Next Story