Connect with us
vijay

Cinema News

தினமும் ஒரு செல்பி!. ஆசையாக பிளான் போட்ட விஜய்!.. இப்படி மண் அள்ளி போட்டாங்களே!..

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். இளைய தளபதியாக இருந்து ஒரு கட்டத்தில் தளபதியாக உயர்ந்தார். இவரின் நடிப்பில் வெளியான படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உருவானது. விஜயின் படங்கள் பல கோடிகளை வசூல் செய்ததால் இவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டார்கள்.

ஒருகட்டத்தில் ரஜினிக்கு இணையாக பேசப்படும் நடிகராகவும் மாறினார். இவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என வாரிசு பட தயாரிப்பாளர் கொளுத்திப்போட, ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் பொங்க, விஜய் ரசிகர்கள் அவர்களிடம் மல்லுக்கட்ட சமூகவலைத்தளங்களே களேபரமானது. பதிலுக்கு ஜெயிலர் பட ஆடியோ விழாவில் ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியது.

இதையும் படிங்க: நானும் சூரியும் பேசிட்டோம்! விஷ்ணு விஷால் சொன்னதுக்கு பின்னாடி இவ்ளோ நடந்திருக்கா?

ஆனால், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் எப்படி ஒரு புரட்சி தலைவரோ, எப்படி ஒரு நடிகர் திலகமோ அப்படி ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான் என சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதோடு, இப்போது அரசியலுக்கு வருவதாகவும் அறிவித்திருக்கிறார்.

தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் எனவும் அறிவித்திருக்கிறார். பொதுவாக விஜய் படப்பிடிப்பு நடக்கிறது என தெரிந்துவிட்டாலே அங்கு ரசிகர்கள் கூடிவிடுவார்கள். சில சமயம் அவர்களோடு சேர்ந்து செல்பி எடுக்கிறார். இதன் காரணமாகவே ரசிகர்கள் அவரின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை தெரிந்துகொண்டு அங்கு போகிறார்கள்.

இதையும் படிங்க: 3 படத்துக்கு சம்பளம் என்னாச்சு? கமலை நம்பி கெரியரை தியாகம் செய்த நடிகை – உண்மையிலேயே கெத்துதான்

இது முதலில் நடந்தது மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போதுதான். விஜய் ஷேர் செய்த அந்த செல்பி புகைப்படம் பல லட்சம் லைக்ஸ்களை பெற்றது. அதன்பின் சமீபத்தில் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்தபோது ரசிகர்களுடன் செல்பியும், வீடியோவும் எடுத்தார் விஜய். இதை தனது அரசியல் ஆதாயத்திற்கும் பயன்படுத்த நினைத்தார்.

அதாவது புதுச்சேரியில் படப்பிடிப்பு நடக்கும்வரை தினமும் ரசிகர்களுடன் ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட நினைத்தார். ஆனால், முதல் நாள் அப்படி புகைப்படம் எடுத்தபோது ரசிகர்கள் அதிக அளவில் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டுள்ளனர். அதோடு, ஆன்லைன் முலம் காவல் புகார் கொடுத்தனர். இது விஜய்க்கு தெரியவந்த பின்னர்தான் இது தினமும் நடந்தால் தனக்கு கெட்ட பெயரை உண்டாக்கிவிடும் என நினைத்து அந்த முடிவை கைவிட்டார் என சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top