முதல்ல ரெண்டுனீங்க.. இப்போ மூணா? ‘கோட்’ படம் பற்றி புதிய அப்டேட்! படமுழுக்க விஜய்தானா?

Published on: May 27, 2024
vijay
---Advertisement---

GOAT Movie: விஜய் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் கோட். இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து இப்போது விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக விஜய் மிகவும் பிசியாக இருக்கிறார். அதற்காக அமெரிக்காவிற்கெல்லாம் சென்று மீண்டும் சென்னைக்கு வந்திருக்கும் விஜய் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க இருக்கிறார்.

மேலும் அடுத்த மாதம் அதாவது ஜூன் மாதம் முழுவதும் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குதல், புத்தகங்கள் வழங்குதல் போன்ற வேலைகளில் கவனம் செலுத்த இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஜூன் மாதம் அரசியலில் ஒரு பெரும் மாற்றம் ஏற்படும் மாதம். ஆகையால் அடுத்த கட்ட அரசியல் எந்த மாதிரி நிலையை நோக்கி போகப் போகிறது என்பதை கண்காணிக்கவும் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட எந்த வேலைகளிலும் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவோடு விஜய் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: காதலை சொல்ல முடியாமல் தவித்த பாடகி ஜானகி… அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!

இந்த நிலையில் கோட் படத்தின் ஒரு புதிய அப்டேட்டை சமீபத்தில் படத்தின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிவித்திருந்தார். அதாவது முதன் முதலில் விஜய் இந்த படத்தில் இரண்டு பாடல்களை பாடி இருக்கிறார் என்ற ஒரு புதிய அப்டேட்டை கொடுத்திருந்தார். இது ரசிகர்களுக்கு மிகவும் புத்துணர்ச்சியை தந்த தகவலாக பார்க்கப்பட்டது. ஏனெனில் இதுவரை இல்லாத அளவு இந்த படத்தில் தான் விஜய் முதன்முதலாக இரண்டு பாடல்களை பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய அப்டேட் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. ஆரம்பத்தில் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக இருந்தது. ஒன்று அப்பா. இன்னொன்று மகன். அப்பாவுக்கு ஜோடியாக சினேகா மகனுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி மூன்று வேடங்களில் விஜய் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மூன்றாவது வேடத்திற்கு ஜோடி இல்லை எனவும் ஆனால் இது மற்ற இரண்டு வேடங்களை விட முக்கியமான கதாபாத்திரம் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: க்ளீனர் முதல் ஹீரோ வரை! நடிகர் சூரியின் யாரும் பார்த்திராத முகங்கள்.. உண்மையிலேயே உழைப்பாளிதான்

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.