இதை நீங்க செஞ்சே ஆகணும்!. அஜித்திடம் விஜய் வைத்த கோரிக்கை!. இது தெரியாம ஏம்ப்பா சண்டை போட்றீங்க?!

அஜித், விஜய் இருவருமே சம காலத்தில் வளர்ந்தவர்கள். அஜித் அமராவதி படம் மூலம் ஹீரோவாக மாறினார். விஜய் தனது அப்பாவால் சினிமாவுக்கு வந்தார். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து ஒருகட்டத்தில் பக்கா ஆக்சன் ஹீரோவாக மாறியவர்கள். அதேபோல், ரசிகர் கூட்டம் அதிகமான நிலையில் இருவருமே மாஸ் நடிகராக மாறினார்கள்.

தமிழ் சினிமாவில் இப்போதுள்ள நடிகர்களில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்கள் இவர்கள் இரண்டு பேரும்தான். பல வருடங்களாகவே இருவரும் போட்டி நடிகர்களாக வலம் வருகிறார்கள். இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகி மோதிக்கொள்ளும். இருவரின் ரசிகர்களும் மோதிக்கொள்வார்கள்.

இதையும் படிங்க: விஜய் பட இயக்குனரை டிக் அடித்த அஜித்!.. எல்லாமே சிறுத்தை சிவா கையிலதான் இருக்கு!…

விஜய் என்ன செய்கிறார்? எந்த இயக்குனரை டிக் அடிக்கிறார்?. அவர் படத்தின் வசூல் என்ன? என எல்லாவற்றையும் அஜித் கவனிப்பார். இதையேதான் விஜயும் செய்வார். விஜயை பற்றி ஒரு செய்தி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனால், உடனே அஜித்தின் புகைப்படமோ இல்லை அவரின் திரைப்படம் தொடர்பான செய்தியோ வெளியாகும். இதையே விஜயும் செய்வார்.

சமூகவலைத்தளங்களில் இருவரின் ரசிகர்களும் எப்போதும் ஹேஷ்டேக் மூலம் மோதிக்கொள்வார்கள். ரசிகர்கள் மோதிக்கொண்டால்தான் நாம் கல்லா கட்ட முடியும் என நினைக்கிறார்களோ என்னவோ, இருவருமே இதை பெரிதாக கண்டிப்பதில்லை. ஆனால், இருவரும் சந்திக்கும் சூழ்நிலை வந்தால் பரஸ்பரம் விசாரித்துகொள்வார்கள். போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள்.

இதையும் படிங்க: ட்விஜய் போட்ட பக்கா மாஸ்டர் ப்ளான்! SK நினைச்சது வேறு.. அங்கு நடந்தது வேறு

இப்போது அரசியல் என்கிற அடுத்த இடத்திற்கு போய்விட்டார் விஜய். தொடர்ந்து சினிமாவில் அவர் நடிப்பாரா என்பதும் தெரியவில்லை. ஆனால், தன்னுடைய ரசிகர் மன்றங்களையே கலைத்த அஜித் எப்போதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்துவிட்டார். கடந்த வருடம் அஜித்தின் தந்தை மரணமடைந்தபோது விஜய் அவரின் வீட்டுக்கு நேரில் சென்று துக்கம் விசாரித்துவிட்டு வந்தார்.

அதேபோல், சில மாதங்களுக்கு முன்பு அஜித்துக்கு மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது தொலைப்பேசியில் அவரிடம் பேசிய விஜய் அஜித்தின் உடல்நலத்தை விசாரித்துவிட்டு ‘நான் அரசியலுக்கு போக போகிறேன். இனிமேல் என் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாகிவிடுவார்கள். நீங்களும் உங்கள் ரசிகர்களை உற்சாகமாக வைத்துகொள்ள வேண்டும். அதற்கு வருடத்திற்கு 2 படங்களாவது நீங்கள் நடிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தாராம் விஜய். விடாமுயற்சி படம் முடியாத நிலையில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க அஜித் ஒப்புகொண்டதை பார்த்தால் விஜய் சொன்னதை அஜித் ஃபாலோ செய்யதுவங்கிவிட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது.

Related Articles
Next Story
Share it