தமிழ்சினிமாவில் பொங்கலுக்கு வெளியான விஜயகாந்த் படங்கள் - ஒரு பார்வை

by sankaran v |
தமிழ்சினிமாவில் பொங்கலுக்கு வெளியான விஜயகாந்த் படங்கள் - ஒரு பார்வை
X

sinnakavundar

தமிழர் திருநாள் என்றாலே மக்களுக்கு ஒரு குதூகலம் வந்து விடும். அதிலும் தங்களுக்குப் பிடித்த நாயகர்களின் படங்கள் என்றால் குஜாலாக ஆகி விடுவர். அந்த வரிசையில் ரஜனி, கமலுக்கு அடுத்தபடியாக முன்னணி நாயகராக விளங்கிய புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. அதிலும் அவரது படங்களில் பொங்கல் பண்டிகைகளுக்கு வந்த படங்கள் பெரும்பாலும் ஹிட் அடித்துள்ளன. அவற்றிலிருந்து ஒரு சிலவற்றைப் பார்க்கலாமா...

புலன் விசாரணை

pulan visaranai

1990ல் ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் வெளியான படம். புரட்சிக்கலைஞர் விஜயகாந்த்துக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இது ஒரு கிரைம் ஸ்டோரியாக வந்தது. ரசிகர்கள் பெரிதும் வரவேற்பு கொடுத்தனர்.

விஜயகாந்துடன் ரூபினி, நம்பியார், ராதாரவி, ஆனந்தராஜ், சரத்குமார், செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசைஅமைத்துள்ளார். இதுதான், இளமைக்கு, குயிலே குயிலே ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

சின்னக்கவுண்டர்

1992ல் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் ஆர்.வி.உதயகுமாரின் இயக்கத்தில் உருவான படம். இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் விஜயகாந்துடன் இணைந்து சுகன்யா ஜோடி சேர்ந்துள்ளார். அவர்களுடன் மனோரமா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர்.

படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அந்த வானத்தைப் போல, சின்னக்கிளி வண்ணக்கிளி, சுத்தி சுத்தி, கண்ணுப்பட போகுதய்யா, கூண்டுக்குள்ள உன்ன வச்சு, முத்துமணி மால, சொல்லால் அடிச்ச, அந்த வானத்தப் போல ஆகிய பாடல்கள் இன்றும் மனதை விட்டு நீங்காதவை.

கருப்பு நிலா

1995ம் ஆண்டு அரவிந்தராஜின் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான அதிரடி படம். அவருடன் இணைந்து குஷ்பு, ரஞ்சிதா, எஸ்.எஸ்.சந்திரன், ஸ்ரீவித்யா, ஆர்.சுந்தரராஜன், மேஜர் சுந்தரராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவா இசை அமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். சின்னவரே, காபி வேணுமா, நம்ம, பல்லாக்கு, சுண்ட கஞ்சி ஆகிய பாடல்கள் உள்ளன.

வானத்தைப் போல

இந்தப்படம் 2000ல் வெளியானது. அப்போதே ரசிகர்கள் இதை செம படம்யா என்று சொன்னார்கள். விக்ரமன் இயக்கியுள்ளார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய படம். அண்ணன் தம்பிகள் எப்படி பாசமாக இருக்க வேண்டும் என்பதை சொல்லித் தந்த படம்.

விஜயகாந்த், பிரபுதேவா, மீனா, கௌசல்யா, லிவிங்ஸ்டன், ரமேஷ் கண்ணா, செந்தில், அஞ்சுஅரவிந்த், ஆனந்த்ராஜ், கசன்கான் உள்பட பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர். பாடல்கள் அனைத்தும் முத்தானவை. காதல் வெண்ணிலா, எங்கள் வீட்டில் எல்லா நாளும், நதியே நைல் நதியே, ரோஜாப்பூ மாலையிலே, தாவணியே என்னை மயக்குறியே, வானில் வெண்ணிலா, மைனாவே மைனாவே ஆகிய பாடல்கள் உள்ளன.

சொக்கத்தங்கம்

2003ல் வெளியான படம். பாக்யராஜ் இயக்கியுள்ளார். விஜயகாந்த், சௌந்தர்யா, பிரகாஷ்ராஜ், கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். தேனிசைத் தென்றல் தேவா இசை அமைத்துள்ளார். என் ஜன்னல், என்ன நினைச்சே, எட்டு ஜில்லா, ஊர் ஊரா போகிற, வெள்ளையாய் மனம் ஆகிய பாடல்கள் உள்ளன. படம் ரசிக்கும்படியாக இருந்தது.

எங்கள் அண்ணா

2004ல் சித்திக் இயக்கத்தில் வெளியானது. விஜயகாந்த், பிரபுதேவா, நமீதா, வடிவேல், சொர்ணமால்யா, இந்திரஜா, மணிவண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆசை அரசா, காதல் துஷ்யந்தா, கால் கிலோ, கொஞ்சி கொஞ்சி, முதன் முதலாக ஆகிய பாடல்கள் உள்ளன.

Next Story