Connect with us
vijayakanth

Cinema History

செம மாஸா அறிவிப்பு வெளியாகி நின்றுபோன விஜயகாந்த் படங்கள்!. – வந்திருந்தா வேற லெவல்…

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும். சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் மற்றும் பெரிய நடிகர் கூட்டணியில் அப்படம் உருவாவதாக அறிவிக்கப்படும். ரசிகர்களிடம் அது பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் ஆனால், அந்த படம் சில காரணங்களால் நின்று விடும். சில திரைப்படங்கள் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து நின்று போகும். சில படங்கள் படப்பிடிப்பு துவங்காமலேயே சில காரணங்களால் நின்றுவிடும். அப்படி விஜயகாந்த் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு நின்று போன சில திரைப்படங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

80,90 களில் தமிழ் சினிமாவில் மிரட்டலான திரைப்படங்களை தயாரித்தவர் ஆபாவாணன். சில படங்களை இயக்கியும் இருக்கிறார். விஜயகாந்தை வைத்து ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூர பூவே, காவிய தலைவன் ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர். இதில் ஊமை விழிகள், உழவன் மகன் ஆகிய படங்களை இயக்கியவர் ஆர்.அரவிந்தராஜ். ஊமை விழிகள் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. ரசிகர்களுக்கு பயத்தை கொடுத்த திரைப்படம் இது. இந்த படம் வெற்றி அடைந்ததும் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘மூங்கில் கோட்டை’ என்கிற படம் உருவானது. மேலும், ஆபாவாணன் இயக்கி, தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இப்படம் நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: படப்பிடிப்புக்கு எதிர்ப்பு!.. வேட்டிய மடிச்சிகட்டி 50 பேரை அடித்த விஜயகாந்த்!.. நிஜத்திலும் அவர் ஹீரோதான்!..

அதேபோல் ஆர்த்தி பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ‘மனித தர்மம்’ என்கிற படம் அறிவிக்கப்பட்டது. அப்போது பல படங்களில் எடிட்டராக பணிபுரிந்த ஜெயச்சந்திரன் இப்படத்தை இயக்கினார். 25 சதவீதம் படப்பிடிப்பு நடந்தபின், தயாரிப்பாளர் கடன் பிரச்சனையில் சிக்கியதால் இப்படம் நின்று போனது.

manitha

விஜயகாந்த் ரஞ்சிதா நடிப்பில் 1996ம் வருடம் வெளிவந்த திரைப்படம் தாயகம். ஆனால் அதற்கு முன்பு ஆ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தயாரிக்க ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்துடன் விஜயசாந்தி சேர்ந்து நடிப்பில் தாயகம் என்ற படத்திற்கு பூஜை போடப்பட்டது. ஆனால், நின்றுபோனது.

ஆ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தயாரிக்க ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் ‘மாஸ்டர் நேதாஜி’ என்ற படத்திற்கு பூஜை போடப்பட்டு நாளிதள்களில் விளம்பரங்கள் வெளிவந்தன. ஆனால், அதுவும் நின்று போனது.

captain

captain

அதேபோல், கேப்டன் பிரபாகரன் வெற்றிக்குபின் ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் ‘The May Day’ என்கிற ஆங்கில படம் துவங்கப்பட்டது. ஆனால், படம் டிராப் ஆனது.

அதேபோல் விஜயகாந்த், சத்தியராஜ், கார்த்திக் ஆகிய மூவரும் இணைந்து நடிப்பதாக ஒரு படம் அறிவிக்கப்பட்டு பின்னர் அது டிராப் ஆனது.

இதையும் படிங்க: தமிழ் தெரியாதுன்னு என்ன தூக்கிட்டாங்க!.. ஆனா அந்த ஹீரோ?!.. அவமானப்பட்ட விஜயகாந்த்…

google news
Continue Reading

More in Cinema History

To Top