Connect with us
udhaya

Cinema History

கல்யாணத்துக்கே கூப்பிடல!. ஆனா விஜயகாந்த் செய்த உதவி!.. நெகிழும் ஆர்.வி.உதயகுமார்…

Viyakanth: நடிகர் விஜயகாந்த் எப்படிப்பட்ட நல்ல மனிதர் என்பதை பல உதாரணங்கள் இருக்கிறது. சினிமாவில் வளரும் போது சரி, வளர்ந்த பின்னாலும் சரி பலருக்கும் உதவி செய்தவர். பசியில் வந்த பலருக்கும் சாப்பாடு போட்டவர். படப்பிடிப்பு தளத்தில் பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரி உணவை போட்டவர்.

இப்படி அவரைப்பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். தன்னால் முடிந்த உதவியை முடிந்தவரை எப்போதும் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பதில் விஜயகாந்த் கடைசி வரை உறுதியாக இருந்தார். அதை செய்தும் காட்டினார். அதனால்தான் அவர் மரணமடைந்தபோது அத்தனை பேர் அவருக்காக வந்தார்கள்.

இதையும் படிங்க: என்னது விஜயகாந்த் உதவி செய்யலயா? நம்புற மாதிரி சொல்லுங்க – அஜித் வராததற்கு இதுதான் காரணமா

அவரின் உடல் தீவித்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள அவரின் அலுவகத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டபோது பொதுமக்களில் பலரும் அவருக்கு மேலிருந்து பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினார்கள். திரையுலகில் அவரால் வளர்ந்தவர்கள் பலர். பல புதிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்திருக்கிறார்.

மன்சூர் அலிகான், சரத்குமார், லிவிங்ஸ்டன் என பலருக்கும் வாழ்வு கொடுத்து தூக்கிவிட்டவர் இவர். விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது சின்னக்கவுண்டர். இந்த படத்தை இயக்கியது ஆர்.வி.உதயகுமார். விஜயகாந்தை வைத்து அவர் இயக்கியது ஒருபடம்தான் என்றாலும் விஜயகாந்துக்கு மிகவும் பிடித்தமான இயக்குனராக உதயகுமார் இருந்தார்.

விஜயகாந்த் உடல் நிலை பாதிக்கப்பட்ட நினைவு தப்பி இருந்தபோது அவரின் வீட்டுக்குபோய் ‘அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே’ பாடலை பாடினார். அப்போதுதான் வந்திருப்பது ஆர்.வி.உதயக்குமார் என புரிந்துகொண்டு கண்களில் கண்ணீர் கசிந்தபடியே அவரின் கையை விஜயகாந்த் பிடித்துக்கொண்டதாக சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: விஜயகாந்த் ஆசை தான் போல!… இடத்துக்காக எதுவும் கேட்கவில்லை பிரேமா!… கலங்கிய தியாகு

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஆர்.வி.உதயகுமார் ‘சின்ன கவுண்டர் படம் இயக்குவதற்கு முன்பே அவரோடு எனக்கு பழக்கம் உண்டு. பிரபுவை வைத்து முதல் படம் இயக்கினேன். அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. ரிலீஸ் தள்ளிபோனதால் திருமண நாள் நெருங்கி வந்துவிட்டது.

கையில் 2500 பணம் மட்டுமே இருந்தது. கல்யாணத்துக்கு ஊருக்கு போய்விட்டேன். என் நண்பர் மூலம் விஜயகாந்துக்கு என் கல்யாண பத்திரிக்கை போனது. விஜயகாந்தை நான் முறையாக அழைக்கவும் இல்லை. ஆனால், ‘உதய் கையில காசு இல்லமால் கல்யாணம் பண்ணப்போறான். 4 காரை டிரைவரோடு அவன் ஊருக்கு அனுப்பி விடு’ என ராவுத்தரிடம் சொன்னார். அப்படி அவர் அனுப்பிய 4 கார்களைத்தான் என் திருமணத்திற்கு பயன்படுத்தினேன்’ என நெகிழ்ந்து பேசினார் ஆர்.வி.உதயகுமார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top