அந்த ஒரு ஆங்கில வார்த்தை!.. பேசமுடியாமல் திகைத்த விஜயகாந்த்.. கலைஞர் வீட்டு விழாவில் நடந்த காமெடி சம்பவம்..

Published on: May 20, 2023
captain
---Advertisement---

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜயகாந்த். எம்ஜிஆருக்கு அடுத்தப் படியான கொடை வள்ளலாகவும் அனைவருக்கும் உதவும் நல்ல பண்பாளராகவும் இருந்த அற்புதமான மனிதர் கேப்டன் விஜயகாந்த். இன்று அவரது உடல் நிலை சரியில்லாமல் வெளியிலேயே வரமுடியாமல் இருக்கிறார். அவரை அவ்வப்போது ஒரு சில பிரபலங்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு சில நேரங்களில் கண்கலங்கி வருகின்றனர்.

captain1
captain1

ரஜினி, கமல் இவர்களுக்கே ஒரு காலத்தில் டஃப் கொடுத்த நடிகராக திகழ்ந்தார் விஜயகாந்த். ஆனால் அவர்களுக்குள் எந்த வித போட்டியும் பொறாமையும் வெளிப்படையாக இருந்ததில்லை. ஒருவரின் புகழ் அவர் மறைந்தாதான் தெரியும் என்று கூறுவார்கள். ஆனால் விஜயகாந்தின் புகழை அவர் இருக்கும் போதே நாம் பேசிக் கொண்டு வருகிறோம்.

அவரை பற்றிய சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.  அந்த வகையில் நடிகர் ராதாராவி விஜயகாந்தை பற்றி சில சுவாரஸ்ய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். அதாவது விஜயகாந்துடன் எப்போதும் ஒரு ஐந்து பேர் இருப்பார்களாம். நடிகர் ராதாராவி, நடிகர் வாகை சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன், பாண்டியன் என ஐந்து பேர் தான் ஒன்றாக சுற்றுவார்களாம்.

captain2
captain2

ஒரு சமயம் கலைஞரின் மூத்த மகனான மு.க.முத்துவின் இல்லத் திருமணத்திற்கு இவர்கள் ஐந்து பேரும் கிளம்பி கொண்டிருந்தார்களாம். புகாரியில் திருமண விழாவை ஏற்பாடு செய்திருந்தார்களாம். அதனால் இந்த ஐந்து பேரும் ஒரே காரில் ஏற பாண்டியன் ‘ஏய் காரை கொண்டாடா, புகாரில காரை விடுடா’ என அந்த மண்டப பெயரை சொல்ல தெரியாமல் சொல்லியிருக்கிறார்.

உடனே ராதாராவி பாண்டியனை பார்த்து ‘ஏய் என்னடா இங்கிலீஷ் பேசுற ? அது புகாரி’ என்று திருத்தமாக சொல்லியிருக்கிறார். உடனே அருகில் இருந்து புகாரி, புகாரி , புகாரி என வாய்ஸ் கேட்டுக் கொண்டே இருந்திருக்கின்றது. யாருனு பார்த்தால் விஜயகாந்த். ராதாராவி கேப்டனை பார்த்து ‘என்னாச்சு?’ என கேட்டாராம்.

captain3
captain3

அதற்கு விஜயகாந்த் ‘அடுத்ததாக நான் எதாவது பேசுவேன், இதே மாதிரி என்ன கிண்டல் பண்ணிட்டீனா? அதான் சொல்லி பார்த்துக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். இதை ஒரு பேட்டியில் ராதாரவி கூறும் போது இதைக் கேட்ட அனைவரும் சிரித்து விட்டனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.