Connect with us
vijayakanth

Cinema News

விஜய் பட நடிகைக்கு விஜயகாந்த் வைத்த செல்லப் பெயர்!.. குசும்பு பிடிச்சவர் போல கேப்டன்!..

பொதுவாக விஜயகாந்த் சினிமாவில்தான் சீரியஸாக இருப்பார். சிவந்த கண்களுடன் கோபமாக முறைத்து வசனம் பேசுவார். தப்பு நடந்தால் தட்டி கேட்பார். எதிரிகளையும், ரவுடிகளையும் அடித்து துவம்சம் செய்வார். பக்கம் பக்கமாக வசனம் பேசுவார். இதுதான் அவரின் ஸ்டைல்.

விஜயகாந்த் படங்களை ரசிகர்கள் விரும்புவதற்கு காரணமே அவர் படங்களில் இடம் பெறும் சண்டை காட்சிகள்தான். துவக்கத்தில் இருந்தே ஆக்‌ஷன் படங்களிலேயே நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர். ஆனால், அவர் மிகவும் ஜாலியான மனிதர், குழந்தைகள் போல குறும்புத்தனம் செய்வார் என்பது பலருக்கும் தெரியும்.

இதையும் படிங்க: அந்த விஷயத்தில் விஷாலையே வியக்க வைத்த கமல்… என்ன செய்தார்னு தெரியுமா?

அது அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கும், அவரின் படங்களில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் மட்டுமே தெரியும். படப்பிடிப்பில் மற்ற நடிகர், நடிகைகள் நடித்து கொண்டிருக்கும்போது சின்னதாக ஒரு கல்லை எடுத்து குறி வைத்து அவர்களின் மீது எறிவாராம் விஜயகாந்த். அதன்பின் அவரே ‘யாருடா கல்லை தூக்கி போட்டது.. பிச்சிப்புடுவேன் பிச்சி’ என கோபப்படுவது போல நடிப்பாராம்.

இந்த தகவலை விஜயகாந்தின் நண்பரும், நடிகருமான வாகை சந்திரசேகரே ஊடகத்தில் தெரிவித்திருக்கிறார். இது மாதிரி பல விஷயங்களை விளையாட்டாக விஜயகாந்த் செய்வாராம். விஜயுடன் பூவே உனக்காக படத்தில் நடித்தவர் நடிகை சங்கீதா. தமிழில் பல படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: நினைச்சது ஒன்னு.. நடந்தது ஒன்னு!.. விஜய் ஆண்டனி புலம்பறதுக்கு இதுதான் காரணமாம்!…

விஜயகாந்துடன் அலெக்சாண்டர் என்கிற படத்தில் நடித்தார். விஜயகாந்த் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். ஆனால், சங்கீதாவோ மிகவும் மெதுவாக செயல்படுவாராம். எனவே, அவரை ‘மஹால் எக்ஸ்பிரஸ்’ என செல்லப் பெயர் வைத்து அழைப்பாராம் விஜயகாந்த். முதலில் அதற்கு என்ன அர்த்தம் என சங்கீதாவுக்கு புரியவில்லையாம்.

sangeetha

பின்னர்தான் சென்னையிலிருந்து மதுரை செல்லும் அந்த ரயில் மிகவும் மெதுவாக செல்லும் என அவருக்கு தெரிய வந்திருக்கிறது. விஜயகாந்த் இருக்கும் படப்பிடிப்பு மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்தாலும் கலகலப்புக்கும் பஞ்சம் இருக்காது என பலரும் சொல்கிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top