Connect with us

Cinema News

இதுக்காகத்தான் அரசியலுக்கு வந்தீங்களா?!.. சிறுமி கேட்ட கேள்வி!. கேப்டன் சொன்ன நச் பதில்…

நடிகராக சினிமாவில் நுழைந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து உச்சம் தொட்டவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். இவரின் பயணம் எல்லாமே எம்.ஜி.ஆரை பின்பற்றியே இருக்கும். ஆக்‌ஷன் படங்களில் நடித்து அப்படியே அரசியலில் ஆர்வம் காட்டி ஒரு கட்டத்தில் தனியாக அரசியல் கட்சியை துவங்கி அரசியலிலும் ஒரு இடத்தை பிடித்தார்.

பிரச்சனை என்றால் தீர்த்து வைப்பது, தவறுகளை தட்டி கேட்பது என்பதுதான் விஜயகாந்தின் இமேஜாக மக்களின் மனதில் பதிந்து போனது. எனவே, அவர் அரசியலுக்கு வந்தபோது குறிப்பிட்ட சதவீத மக்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தனர். ஒருகட்டத்தில் எதிர்கட்சி தலைவராகவும் விஜயகாந்த் அமர்ந்தார்.

இதையும் படிங்க: மங்காத்தா அஜித்துக்கு டஃப் கொடுக்கும் சிம்பு!.. தக் லைஃப் வீடியோ வெறித்தனம்!…

அவரின் கட்சியில் பலரும் எம்.எல்.ஏ. ஆனார்கள். ஆனாலும், அரசியல் விளையாட்டுகளால் அவர் நம்பிய சில எம்.எல்.ஏக்களை அவரின் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியை ஆதரித்தனர். இது மனதளவில் விஜயகாந்தை பெரிதும் பாதித்தது. அதோடு, அவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டதால் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.

கடந்த 10 வருடங்களுக்கும் மேல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவரின் நெருங்கிய நண்பர்கள் கூட அவரை பார்க்க அனுமதி கொடுக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி அவர் மரணமடைந்தார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த 15 லட்சம் மக்கள் வந்ததாக சொல்லப்படுகிறது.

vijayakanth

நல்ல மனிதர்.. எல்லோருக்கும் உதவி செய்தவர். சுயநலம் இல்லாதவர் என்கிற இமேஜை மக்களின் மனதில் ஏற்படுத்திவிட்டு போயிருக்கிறார் விஜயகாந்த். இந்நிலையில், அவர் அரசியல் கட்சியை துவங்கி இருந்த புதிதில் ஒரு பள்ளி மாணவி அவரிம் ‘மக்களிடம் பிரபலமாக வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வந்தீர்களா?’ என ஒரு கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் சொன்ன விஜயகாந்த் ‘இப்போது நான் பிரபலம் இல்லையா?. அரசியல் கட்சி துவங்கிதான் நான் பிரபலமாக வேண்டுமா?.. மக்களுக்கு நல்ல செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் அரசியலுக்கு வந்திருக்கிறேன். உங்களுக்கு படிப்பு செலவுக்கு பணம் இல்லை எனில் நான் கொடுப்பேன். இன்னும் 10 பேருக்கு கொடுப்பேன். ஆனால், நாட்டில் எத்தனை ஏழை மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் உதவ வேண்டும் எனில் அதிகாரத்தில் இருக்கவேண்டும். அதற்காகத்தான் அரசியல்’ என தெளிவாக சொன்னார் கேப்டன் விஜயகாந்த்.

google news
Continue Reading

More in Cinema News

To Top