விஜயகாந்துடன் 8 முறை மோதிய மைக் மோகன் படங்கள்!.. ஜெயிச்சது யாரு தெரியுமா?..

by சிவா |   ( Updated:2024-03-29 09:15:40  )
mnohan
X

80களில் விஜயகாந்த், ரஜினி, கமல், மோகன் போன்ற நடிகர்களின் படங்களுக்கு இடையே நிறைய போட்டி இருந்தது. எல்லோருமே போட்டிகொண்டு ஹிட் படங்களை கொடுத்தனர். இதில், விஜயகாந்துடன், மைக் மோகன் மோதிய 8 படங்கள் பற்றியும், அதில் எந்த படம் அதிக வசூலை பெற்றது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

விஜயகாந்துடன் முதலில் மோதிய மைக் மோகன் படம் நான் பாடும் பாடல். இந்த படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். 1984ம் வருடம் இப்படம் வெளியானது. இந்த படத்தோடு கங்கை அமரன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த வெள்ளைப்புறா ஒன்று படமும் வெளியானது. இதில், வெள்ளைப்புறா படம் நல்ல வசூலை பெற்றது. நான் பாடும் பாடல் படமும் ஆவரேஜாக ஓடியது.

இதையும் படிங்க: நடிக்க மறுத்த விஜயகாந்த்!. பிரபு, சத்தியராஜ் நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள்!..

அடுத்து, அதே வருடம் விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் படமும், மோகனின் ஓ மானே மானே படமும் ஒன்றாக வெளியானது. வைதேகி காந்திருந்தாள் படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். ஓ மானே மானே படத்தை ஜெகந்நாதன் இயக்கியிருந்தார். இதில் மோகனுக்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருந்தார். இந்த படம் சுமாரான வசூலை பெற்றது. ஆனால், விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் படம் 125 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

மூன்றவதாக விஜயகாந்தின் ஜனவரி 1 என்கிற படமும், மோகனின் அம்பிகை வந்தாள் என்கிற படமும் ஒன்றாக வெளியாகி மோதியது. இந்த இரண்டு படங்களையுமே மணிவண்ணன் இயக்கியிருந்தார். இதில், ஜனவரி 1 படமே சூப்பர் ஹிட் அடித்தது. 4வதாக, மோகனின் தென்றல் வந்து என்னை தொடும் படமும், விஜயகாந்தின் இது எங்க பூமி படமும் மோதியது. இதில், மோகன் படம் ஆவரேஜாக போக விஜயகாந்த் படம் நல்ல வசூலை பெற்றது.

5வதாக மோகனின் டிசம்பர் பூக்கள் படமும், விஜயகாந்தின் கரிமேடு கருவாயன் படமும் ஒன்றாக மோதியது. இதில், மோகன் பாடம் சுமாரான வசூலை பெற்றது. ராமநாராயணன் இயக்கிய கரிமேடு கருவாயன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. 6வதாக மணிரத்னம் இயக்கத்தில் மோகன் நடித்த மௌன ராகம் படமும், விஜயகாந்தின் ஊமை விழிகள் படமும் ஒன்றாக மோதியது.

இதையும் படிங்க: நடிக்க மறுத்த விஜயகாந்த்!. பிரபு, சத்தியராஜ் நடித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள்!..

இந்த இரண்டு படங்களுமே வெற்றி என்றாலும், விஜயகாந்தின் ஊமை விழிகள் படம் அசத்தலான வெற்றி பெற்றது. 7வதாக மோகனின் இது ஒரு தொடர்கதை படமும், விஜயகாந்தின் வீர பாண்டியன் படமும் ஒன்றாக வெளியாகி மோதியது. இதில் வீரபாண்டியன் படத்தில் சிவாஜியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதில், மோகன் படத்தை விட விஜயகாந்தின் வீர பாண்டியன் படம் அதிக வசூலை பெற்றது.

8வதாக விஜயகாந்தின் நல்லவன் படமும், மோகனின் மாப்பிள்ளை சார் படமும் ஒன்றாக மோதியது. நல்லவன் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். இந்த முறையும் விஜயகாந்தே வெற்றி பெற்றார். மொத்தத்தில் 8 முறையும் விஜயகாந்தின் படங்களே அதிக வசூலை பெற்றது.

Next Story