போஸ்டரிலயே தரமான அரசியல்..! தளபதி 69 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..!

by ramya suresh |   ( Updated:2024-09-14 12:02:08  )
போஸ்டரிலயே தரமான அரசியல்..! தளபதி 69 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு..!
X

#image_title

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் கடைசியாக நடித்த கோட் திரைப்படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்த நிலையில் நடிகர் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

மேலும் படம் வெளியான முதல் நான்கு நாட்களிலேயே 288 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது எந்த திரைப்படங்களும் ரிலீசாகாமல் இருப்பதால் தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை காண திரையரங்குக்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

மேலும் இது வார இறுதி நாட்கள் என்பதால் இன்றும், நாளையும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. கடந்த 9 நாட்களில் மட்டும் படத்தின் வசூல் 450 கோடிகளை எட்டி இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நடிகர் விஜயின் கடைசி படம் என்று கூறப்பட்டு வரும் தளபதி 69 ஆவது படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கின்றது. நேற்று மாலை 5 மணிக்கு படம் தொடர்பான அப்டேட் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் நடிகர் விஜயின் 30 வருட திரைப்பயணத்தை விவரிக்கும் உணர்ச்சிபூர்வமான வீடியோ ஒன்றை வெளியிட்டு ஒன் லாஸ்ட் டைம் என்று தெரிவித்து படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.

அதன்படி தற்போது இந்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே கூறியது போல இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்க இருக்கின்றார். மேலும் ராக் ஸ்டார் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கின்றார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கின்றது. மேலும் நடிகர் விஜய் தீப்பந்தத்தை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்துடன் அக்டோபர் 2025 ஆம் ஆண்டு இப்படம் ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

'ஜனநாயகத்திற்கான தீப்பந்தத்தை ஏற்றுவார்' என்ற வாசகத்துடன் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகின்றது. இது இவரின் கடைசி படம் என்பதால் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்று தெரிவித்து வந்த நிலையில் இந்த வாசகத்தோடு வெளியான அறிவிப்பு அதை உறுதியாகி இருக்கின்றது.

Next Story