More
Categories: Cinema News latest news

அந்தப் படத்தை பார்த்ததுக்கு ஒரு லட்சமா? விஜய் சேதுபதி சொன்ன சுவாரஸ்ய தகவல்

Vijaysethupathi: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என அனைவராலும் அழைக்கப்படும் இவர் பழகுவதில் மிகவும் எதார்த்தமானவர் .ஹீரோ என்ற ஒரு அந்தஸ்து பார்க்காமல் எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர். அனைவருக்கும் பிடித்தமான நடிகர். மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்தவர்.

ஒரு துணை நடிகராக சைடு ஆக்டராக ஒரு சில படங்களில் நடித்து இப்போது ஒரு மெயின் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார் என்றால் அதற்கு பின்னாடி அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். சமீபத்தில் இவர் நடித்து வெளியான மகாராஜா திரைப்படம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அதுவும் ஹீரோவாக பல நாட்கள் கழித்து வெற்றியடைந்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இதையும் படிங்க: ஒரே மாதிரியான காஸ்ட்யூம்.. மேக்கப்! ட்வின்ஸ் கூட தோத்துடுவாங்க! திடீரென மீட்டிங்கை போட்ட நயன் – நஸ்ரியா

இந்த நிலையில் அவர் சொன்ன ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் சேதுபதி தற்போது மிஸ்கினுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கின்றார். மிஸ்கினைப் பற்றி அவர் கூறும் போது  ‘சைக்கோ படத்தை பல நாள்கள் பார்க்காமல் இருந்தாராம் விஜய் சேதுபதி. ஏனெனில் இந்த படத்தை எடுத்தவரும் ஒரு சைக்கோவாகத்தான் இருப்பார் என நினைத்துக் கொண்டு அதுவரை பார்க்காமல் இருந்திருக்கிறார்’.

திடீரென ஒரு நாள் படத்தை பார்த்துவிட்டு மிஷ்கினை சந்திக்க சென்றிருக்கிறார். ஏனெனில் அந்த படத்தை பார்த்த பிறகு விஜய் சேதுபதியின் புரிதல் சரியா தவறா என்பது மிஷ்கினுடன் பேசினால் மட்டும்தான் தெரியும் என்ற ஒரு காரணத்தினால் படத்தை பற்றி இன்னும் விளக்கமாக தெரிந்து கொள்ள மிஷ்கினை சந்தித்து பேசினாராம் .

இதையும் படிங்க: திராணியும் தைரியமும் இல்ல!. எங்க அண்ணனை விட்டுடுங்க!. கங்குவா அப்டேட் கேட்டு பொங்கும் சூர்யா ரசிகர்கள்..

‘ஒரு நடிகராக இருந்ததனால் இது எனக்கு எளிதாக கிடைத்தது. ஒரு படத்தை பற்றி தெரிய அந்தப் படத்தின் இயக்குனரிடமே கேட்டு தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதான விஷயம் இல்ல. எட்டு மணி நேரம் எங்களுடைய மீட்டிங் நடந்தது. அதன்பிறகு மிஸ்கின் அவருடைய கைக்கடிகாரத்தை கழட்டி என்னிடம்கொடுத்தர்.  அந்த கடிகாரத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய்.  அந்தப் படத்தை பார்த்ததுக்கு ஒரு லட்சம்’ என விஜய் சேதுபதி கூறினார்

Published by
Rohini

Recent Posts