போதும்ட சாமி! உங்க சகவாசமே வேணாம் - திடீர் முடிவால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மக்கள் செல்வன்

sethu
Actor Vijaysethupathi: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தன்னை ஒரு நடிகனாக நிலை நிறுத்தியவர் பிறகு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலமாக முதல் ஹீரோ அறிமுகத்தை பதிவு செய்தார்.
ஹீரோனாலே கெத்தான தோற்றம், ஸ்டைலான உடை, நாகரீகமான பேச்சு என்பதை முற்றிலுமாக உடைத்தார் விஜய்சேதுபதி. அனைவரிடமும் எதார்த்தமாக பழக கூடிய மனநிலை கொண்டவர். கூட நின்று பேசும் போது மற்றவரின் தோளின் மீது கைபோட்டுதான் பேசுவார்.
இதையும் படிங்க: எவ்வளவு கேஸ் போட்டாலும் கெட்டப் பையன் சார் இந்த அருண்! ‘கேப்டன் மில்லர்’ படத்தால் தயாரிப்பாளருக்கு வந்த சோதனை
மிகவும் பிடித்தவர் என்றால் முத்தம் கொடுப்பதை வழக்கமாக கொண்டவர். இதனாலேயே அவரை மக்கள் செல்வன் என ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். இப்படி ஹீரோவாக படிபடியாக வளர்ந்து ஒருமாஸ் ஹீரோவாக தன்னை வளர்த்துக் கொண்டார்.
அதற்கு சிறந்த உதாரணமாக சேதுபதி படத்தை சொல்லலாம். விக்ரம் வேதா படத்தையும் கூறலாம். தொடர்ந்து ஹீரோவாக ஜொலிப்பார் என்று பார்த்தால் திடீரென வில்லன் ரோலுக்கு தாவினார். ஆனாலும் அவருக்கு இருந்த மாஸ் குறையாமல்தான் இருந்தது.
இதையும் படிங்க: குத்தாட்டமும் இல்ல.. கொண்டாட்டமும் இல்ல! கேப்டன் மறைவிற்கு அஜித் வராததற்கு முக்கிய காரணம்
சொல்லப்போனால் ஹீரோவாக இருந்து ரசித்ததை விட வில்லனாகத்தான் விஜய்சேதுபதியை மக்கள் ரசித்தார்கள். பேட்ட படத்தில் இருந்து தொடர்ந்து எல்லா படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாகவே நடித்தார் விஜய்சேதுபதி.
இதற்கிடையில் பாலிவுட்டிலும் களம் இறங்கினார். அவரது நடிப்பில் பொங்கலுக்கு வரவிருக்கும் பாலிவுட் திரைப்படம் மேரி கிறிஸ்துமஸ். அவருக்கு ஜோடியாக காத்ரினா கைஃப் நடிக்கிறார். இந்தப் படத்திற்கான ப்ரோமோஷனில் கடுமையாக ஈடுபட்டு வருகிறாராம் விஜய்சேதுபதி.
இதையும் படிங்க: குத்தாட்டமும் இல்ல.. கொண்டாட்டமும் இல்ல! கேப்டன் மறைவிற்கு அஜித் வராததற்கு முக்கிய காரணம்
அதற்கு காரணம் இனிமேல் ஹிந்தியில்தான் அதிகம் நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. கோலிவுட்டை விட பாலிவுட்டில் அதிக சம்பளம் கொடுப்பதால் அங்கேயே போய்விடலாமா என்ற ஐடியாவில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.