கதை தேர்வில் புது யுத்தியை கையாண்ட மக்கள் செல்வன்!.. இனி இவங்க இல்லாம துரும்பும் நகராது!..
தமிழ் சினிமாவில் மிகவும் குறுகிய காலத்தில் வெற்றிக் கொடி நாட்டிய நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரை மக்கள் அனைரும் ‘மக்கள் செல்வன்’ என்றே அழைக்கின்றனர். அந்த அளவுக்கு திரையுலகத்திலும் சரி ரசிகர்களிடமும் சரி ஒரு சராசரி மனிதனை போல் பழகுபவர். ஹீரோ என்ற ஒரு அதிகார பவரில் என்றைக்குமே இவர் இருந்ததில்லை.
தன்னுடம் இருக்கும் நபர்களை எப்பொழுது சகஜ நிலையிலேயே வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு நடிகர். அவர் ஒரு பெரிய நடிகர் என்று யாரும் பயந்து போக அவசியமே இல்லை. அதனாலேயே அவரை மக்கள் செல்வன் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் இவரை உதறித் தள்ளிய இயக்குனர்கள் கூட இப்போது இவரின் வளர்ச்சியை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க : இவர்கிட்ட எல்லாம் வாலாட்ட முடியுமா?.. ஷாரூக்கானுக்கு சத்யராஜ் போட்ட அக்ரிமென்ட்!..
ஆரம்பத்தில் கிடைத்த ரோல்களில் நடித்து சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அதை எந்த ஒரு தயக்கமுமின்றி ஏற்று நடித்தவர். இப்பொழுது இவரின் கால்ஷீட்டிற்காக நிறைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றனர். ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி.
சொல்லப்போனால் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றதை வில்லனாக நடித்து தான் அதிக வரவேற்பை பெற்றார் விஜய்சேதுபதி. அதனாலேயே ஏராளமான படங்கள் இவரை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மட்டுமே அழைப்பு விடுக்கின்றனர். ஆனாலும் அதை எல்லாம் விஜய் சேதுபதி ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் ஹீரோவாக தான் மக்கள் அவரை முதலில் ரசிக்க தொடங்கினார்கள். அதை என்றும் மறக்க மாட்டார் விஜய்சேதுபதி.
இது ஒரு பக்கம் இருந்தாலும் விக்ரம் படத்தின் புகழை ஒரே நிமிடத்தில் சாய்த்த மாதிரி அதன் பிறகு வெளியான டிஎஸ்பி படம் அவரை ஒரே சறுக்காக சறுக்கி விட்டது. படத்தின் கதையில் எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லை. எப்படி விஜய் சேதுபதி இப்படி ஒரு கதையில் ஏற்று நடித்தார் என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருந்தது. மேலும் அவர் சமீபகாலமாக ஹீரோவாக தேர்ந்தெடுக்கும் கதைகள் அந்த அளவுக்கு சொல்லும் படியாக இல்லை என்றும் கூறிவருகின்றனர்.
கிடைக்கிற எல்லா படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்து வருவதனால் கதையை பற்றி கவலைப்படவில்லை என்ற பேச்சும் எழுகிறது. இந்த நிலையில் அவர் தன்னிடம் கதை கேட்பதற்காகவே இரண்டு பெண்களை வைத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்து வருகின்றது. அவரிடம் கதை சொல்லும் இயக்குனர்கள் அந்த பெண்களை பார்த்து தான் சொல்ல வேண்டுமாம். இது விஜய்சேதுபதியின் முடிவு என்று சொல்கிறார்கள். மேலும் ஹிந்தியிலும் பிஸியாக இருப்பதால் மும்பைக்கு போகும் போதும் அந்த பெண்களை அழைத்துக் கொண்டுதான் போகிறாராம் விஜய்சேதுபதி.