மலேசியாவில் மாஸ் காட்டிய விஜய்சேதுபதி! அனைவரையும் சல்யூட் போட வைத்த சம்பவம்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் விஜய்சேதுபதி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கேற்ப மக்களால் ரசிக்கப்படுகிறார் விஜய்சேதுபதி.
சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் எல்லாமே தோல்வியில் தான் போய் முடிகின்றது. ஆனால் வில்லனாக மாஸ் காட்டிய படங்கள் மாபெரும் ஹிட் அடித்து விடுகின்றன. அதனாலேயே விஜய்சேதுபதியை அனைவரும் வில்லனாகவே எதிர்பார்க்கின்றனர்.
இருந்தாலும் விஜய்சேதுபதி ஹீரோ வாய்ப்பையும் தவறவிடுவதில்லை. குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது.அப்போது மலேசியா வாழ் தமிழர்கள் விஜய்சேதுபதியின் வருகையை அறிந்து அவரை முற்றுகையிட்டு விட்டனராம்.
அப்போது ஒரு பெண் ரசிகை தனியாக வந்து விஜய்சேதுபதியிடம் தான் அனுபவிக்கும் கொடுமைகளை சொல்லி அழுது புலம்பியிருக்கிறார். அதாவது மலேசியாவில் வீட்டு வேலை என்று அழைத்து வரவழைக்கப்பட்டவராம் அந்த பெண்மணி. ஆனால் அந்த வேலை பிடிக்காமல் அந்த கம்பெனிக்கு தெரியாமல் வெளியே வந்து கிடைக்கிற வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
அதனால் விசா நேரம் முடிந்தும் தமிழகத்திற்கு போக முடியாத நிலையில் இருக்கிறாராம் அந்த பெண்மணி. இதையெல்லாம் விஜய்சேதுபதியிடம் கூற விஜய்சேதுபதி உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அந்த பெண்மணியை தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைத்தாராம். இந்த செய்தி தான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க : கமல் படத்தில் நடிக்க எனக்கெதிராக திரண்ட கோடம்பாக்கம்! ஏன்னு தெரியுமா? தியாகு ஓப்பன் டாக்