கூரையை பிச்சுக்கிட்டு கொடுத்தாலும் இந்த ஆசை மட்டும் அடங்காது! விடாமல் லோகேஷை டார்ச்சர் செய்யும் விஜய்சேதுபதி

Published on: August 14, 2023
viji
---Advertisement---

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு என்ற ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கின்றது. நடிக்க வந்து சில குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.  மக்கள் செல்வன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர். எதார்த்தமாக நடிக்கக் கூடியவர்.

அனைவரிடமும் எதார்த்தமாக பழகக் கூடியவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஒரு பேன் இந்திய நடிகராகவே மாறி படு பிஸியாக நடித்து வருகிறார்.கைவசம் எக்கச்சக்க படங்களை வைத்திருக்கும்  மக்கள் செல்வனை சுற்றி இன்னும் ஏராளமான தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: மதுரையில் லியோ ஆடியோ ரிலீசா?… ஆத்தி ஆளை விடுங்க.. வெளிநாட்டுக்கு மாத்துங்க… அந்தர்பல்டி அடித்த விஜய்

அவரின் கால்ஷீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜய்சேதுபதியோ லோகேஷின் காலடியில் கிடக்கிறாராம். ஏனெனில் ரஜினி – லோகேஷ் கூட்டணியில் உருவாக இருக்கும் தலைவர் 171 படத்தில் தானும் நடிக்க வேண்டும் என விஜய் சேதுபதி ஆசைப்படுகிறாராம்.

ஏற்கெனவே ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்திருந்தாலும் லோகேஷ் இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறாராம். மேலும் லோகேஷ் இயக்கத்தில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்து ஒரு மாஸை உருவாக்கியிருந்தார் விஜய் சேதுபதி.

அதை போலவே ரஜினியுடனும் நடிக்க கண்டிப்பாக தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என லோகேஷின் காலைப் பிடிக்காத குறையாக கேட்டு வருகிறாராம். ஒரு பக்கம் இவரின் கால்ஷீட்டிற்காக தவம் கிடந்து கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க : சம்பளம் அதிகமா வாங்கிட்டா நீங்க சூப்பர்ஸ்டாரா? அவர் இடத்துக்கு நீங்க வர முடியாது.. தளபதியை வறுத்தெடுத்த பிரபலம்

ஆனால் விஜய்சேதுபதியோ எப்படியாவது ரஜினி 171 படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். மேலும் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கி ஜனவரியில் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே தலைவர் 170க்காக ரஜினி வெறும் 38 நாள்கள் தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். அந்தப்  படத்தின் படப்பிடிப்பு  முடிந்த கையோடு லோகேஷின் படத்தில் களமிறங்க போகிறாராம் ரஜினி.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.