பணத்தைப் பார்த்த உடனே ரொம்ப ஜாலியா இருக்க ஆரம்பிச்சிட்டேன்..இந்த நடிகரா இப்படி சொல்கிறார்?!

Actor viknesh
நடிகர் விக்னேஷ் கிழக்குச்சீமையிலே படத்தில் நடித்து இருப்பார். அவரது வாழ்வில் நடந்த சில மறக்க முடியாத சம்பவங்களைப் பார்ப்போம்.
90களில் சின்னத்தாயி படத்தில் வந்து சக்கை போடு போட்டார் விக்னேஷ். இந்தப்படம் 1992ல் வந்தது. தாய்க்குலங்கள் மத்தியில் பேராதரவு பெற்றார். அதன்பின்னர் தொடர்ந்து அவருக்கு வெற்றிமயம் தான்...கிழக்குச்சீமையிலே, நாடோடி மன்னன், மண்ணுக்கு மரியாதை, என்னைத் தாலாட்ட வருவாளா, சூரி என பல படங்களில் நடித்து தன் இடத்தைத் தக்க வைத்தார்.
அதன்பிறகு தான் அவரது சினிமா வாய்ப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இதற்கு என்ன காரணம் என பார்ப்போமா..!

Viknesh
2021ல் இவர் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தைப்பற்றி இவர் கூறுகையில்,
உறவுகளோடு விளையாடும் படம். நிஜ வாழ்க்கையில் எனக்குக் கிடைக்காதது இந்தப்படத்தில் கிடைத்தது. என் கூட பிறந்தவங்க யாரும் கிடையாது. லேடீஸ்கூட அதிகமா பழகுனதுல்ல. அதனால என்கூட யாராவது ரொம்ப கேர் பண்ணா அவங்கக்கூட அபெக்ஷனாயிடுவேன் என்று ரியலாகப் பேசினார்.
தொடர்ந்து தன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை அவரே யதார்த்தம் மாறாமல் பேசுகிறார்.
தியா படத்தில ஒரு மாடல் கூட தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அவங்க என் படம் சூரி படத்தில நடிக்கணும்னு வந்தாங்க. நடிக்க முடியல. படம் சான்ஸ் கிடைக்கலன்னு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. நிறைய பேரு தற்கொலை பண்றாங்க. அவங்களுக்கு நான் சொல்றது என்னன்னா தயவு செய்து யாரும் தற்கொலை பண்ணனும்னு நினைக்காதீங்க.
இது ஒரு முடிவு கிடையாது. அந்த டைம்ல முடியும்டா நம்மால. நம்மால முடியாதத இந்த உலகத்துல யாருடா செய்ய முடியும்னு உங்களுக்கு நீங்களே தைரியத்தைக் கொடுங்க. வேற யாரும் சப்போர்ட் பண்ணனும்னு நினைக்கவே நினைக்காதீங்க. உங்களுக்கு சப்போர்ட் நீங்க தான். முடிஞ்சா நீங்க மத்தவங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க. அதனால தற்கொலை யாரும் பண்ணிக்காதீங்க.

Actor viknesh
நான் நடிக்கணும்னு வந்தேன். கஷ்டப்பட்டேன் நடிகனாயிட்டேன். நடிகனா ஆன பிறகு நம்ம தொழில்ல நம்மள இம்ப்ரூவ் பண்ணிக்கணும். நல்ல டைரக்டர், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கணும். நல்ல கெட் அப், நல்ல ஓடுற படங்களா செலக்ட் பண்ணத் தெரிஞ்சுக்கணும்.
அது எனக்குத் தெரியல. காரணம் என் கூட யாரும் இல்ல. மேனேஜர் கூட இல்ல. என் கூட பிறந்தவங்க யாரும் இல்ல. எனக்குப் பணம், காசு நிறைய வந்த உடனே அந்த உழைப்பு, ஹார்டு ஒர்க் பண்ணனும், நம்மள டெவலப் பண்ணிக்கிடணும்கறது எனக்கு மறைச்சிருச்சி.
என் லைப்ல நடந்ததைத் தான் நான் சொல்றேன். யங் ஸ்டர்ஸ் சக்சஸ் வரும்போது இன்னும் ஹார்டு ஒர்க் பண்ணனும். சக்சஸ் வந்துருச்சி நாம ஜெயிச்சிட்டோம்னு ஜாலியா சுத்துறது...நான் சுத்துனேன்...
ரொம்ப என்டர்டெயின்மெண்ட், ஜாலியா சுத்துறது, ட்ரிங்ஸ், நிறைய கேர்ள் பிரண்ட்ஸ்னு என்;டர்டெயின்மெண்ட்ல நிறைய போனேன்...நான் அடுத்த படங்கள்ல செலக்ட் பண்றது, நல்ல படங்கள்;ல செலக்ட் பண்றது எனக்குத் தெரியல.
அது ரொம்ப முக்கியம். ஒரு வெற்றியாளன் தன்னைத் தக்க வச்சிக்கணும்னா மேலும் மேலும் ஹார்டு ஒர்க் பண்ணிக்கிட்டே இருக்கணும். உழைக்கணும். அப்படி பண்ணலேன்னா அவன் வெற்றியைத் தக்க வைக்க முடியாது. மேலும் பெரிய வெற்றியாளனா வர முடியாது.

viknesh
ஒரு கால கட்டத்துக்கு அப்புறம் தான் நான் யோசிச்சேன். இது தப்பா இருக்குமோ...நாம தப்பான வழில போறோம்..நான் கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான் என்னோட பார்ட்னர் ஒரு வழிக்குக் கொண்டு வந்தாங்க.
நான் என்ஜாய் பண்ணதுக்குக் காரணமே நான் சின்ன வயசில இருந்து பணத்தைப் பார்த்தது கிடையாது. வறுமை...வறுமை...ங்கறதால பணத்தைப் பார்த்த உடனே ரொம்ப ஜாலியா இருக்க ஆரம்பிச்சிட்டேன்...லைப்ல அது எனக்கு பிளஸ்சும் அதுதான் மைனசும் அதுதான்.
சமீபத்தில் சதுரங்க வேட்டை படத்தில நடந்தது போல இரிடியம் மோசடியில் நடிகர் விக்னேஷ் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏமாந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.