திருச்சியில் விக்ரமை பாடாய் படுத்திய ரசிகர்கள்...! என்னால இருக்க முடியாது...! விக்ரமின் அந்த பேச்சு...
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரின் நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா என இரு பெரும் படங்கள் வரிசைகட்டி காத்து கொண்டிருக்கின்றன. கோப்ரா இந்த மாத இறுதியிலும் பொன்னியின் செல்வன் படம் அடுத்த மாத இறுதியிலும் திரையரங்குகளை அலங்கரிக்க போகின்றன.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி, ஆகியோர் நடிப்பில் தயாரான படம் தான் கோப்ரா.இந்த படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் புரோமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் முதல் கட்டமாக இன்று திருச்சியில் ரசிகர்களை சந்திப்பதற்காக அங்கு உள்ள தனியார் கல்லூரிக்கு வருகை தந்தார் நடிகர் விக்ரம்.
விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்களின் நெரிசலில் சிக்கி வேறு வழியில்லாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று காருக்குள் ஏறிவிட்டார் விக்ரம். அங்கு இருந்து கல்லூரிக்கு சென்று மாணவர்களை சந்தித்து பேசிய விக்ரம் சில அறிவுரைகளையும் வழங்கினார். மாணவர்களும் விக்ரமை கண்ணாடியை கழட்டு தலைவா, கெத்தா போஸ் கொடு தலைவா, ஓ போடு தலைவா என ஒவ்வொன்றாக செய்து காட்ட சொல்ல விக்ரமும் அதை மறுக்காமல் செய்து மாணவர்களை பரவசப்படுத்தினார்.
இதையும் படிங்களேன் : டிரெஸ்ஸ குறைச்சா மார்க்கெட் ஏறுமா?!…தொடையை காட்டி சூடேத்தும் வரலட்சுமி….
அப்போது ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த விக்ரம் ரசிகர்களின் இந்த கூச்சல் , நெரிசல் உங்களை துன்புறுத்துகிறதா என கேட்க அதற்கு விக்ரம் ஐய்யோ அப்படி இல்லை. இதற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ரசிகர்கள் தான் தெய்வம். மேலும் எந்த ரத்தம் பந்தமும் இல்லாமல் என் மீது பாசம் வைத்திருக்கும் ரசிகர்களை தெய்வமாக தான் பார்க்கிறேன். சில ரசிகர்களின் செயல்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். சத்தியமா என்னால இப்படி எல்லாம் இருக்க முடியாது என கூறினார்.