மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த சியான் விக்ரம்!.. அதுக்கு அப்புறம்தான் அந்த ஹீரோ நடிச்சாராம்!…
தமிழ் சினிமாவில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் விக்ரம். துவக்கத்தில் பட வாய்ப்புகளுக்காக பல வருடங்கள் போராடி சில படங்களில் நடித்தார். அப்பாஸ், பிரபுதேவா போன்ற ஹீரோக்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். பாலா இயக்கத்தில் அவர் நடித்த ‘சேது’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பின் தில், தூள் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார். சாமி திரைப்படம் அவரை முன்னணி ஹீரோவாக மாற்றியது. பாலா கேட்டு கொண்டதால் ‘பிதாமகன்’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். அந்த படத்தில் அவருக்கு வசனமே இல்லை என்றாலும் அவரின் நடிப்பு அவருக்கு தேசிய விருதை பெற்றுதந்தது. அதன்பின் ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கமாட்டேன் என பேட்டி கொடுத்தார்.
இயக்குனர் மணிரத்னம் ‘ஆயுத எழுத்து’ படத்தை இயக்கிய போது அப்படத்தில் நடிக்க விக்ரமை அழைத்தார். ஆனால், நடிக்கமாட்டேன் என மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் அவருக்கு பதில் மாதவன் அந்த வேடத்தில் நடித்தார். ஆனால், கடந்த பல வருடங்களாகவே அவரின் படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது. எனவே, தனது முடிவை மாற்றிக்கொண்டு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார்.
இந்த படத்தின் வெற்றி அவரை உற்சாகப்படுத்தியுள்ளது. இனிமேலும், தொடர்ந்து மற்ற நடிகர்களுடன் சியான் விக்ரம் இணைந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.