புதுமுக நடிகரை தேடிக் கொண்டிருந்த இயக்குனர்!.. உண்மையை மறைத்து நடிக்க வந்த விக்ரம்..
தமிழ் சினிமாவில் சீயான் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். பாலா இயக்கத்தில் ‘சேது’ படத்திற்கு பிறகு தான் அவருக்கு இந்த பெயர் கிடைத்தது. அது முதலே இன்று வரை சீயான் சீயான் என்று ரசிகர்களின் கூச்சலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் விக்ரம்.
தனது வித்தியாசமான கெட்டப்களால் மக்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் விக்ரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வேறு மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகராக ஒரு பக்கம் இருந்தாலும் இன்று வரை மற்ற நடிகர்களுக்கு ஒரு பின்னனி குரல் கொடுக்கும் நடிகராகவும் இருந்து வருகிறார்.
இயல்பாகவே விக்ரம் ஒரு நல்ல பாடகரும் கூட. தேசிய விருது, மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது, 6 முறை பிலிம்பேர் விருது, 4 முறை விஜய் விருது என பல விருதுகளுக்கு சொந்தக் காரராக திகழ்கிறார். அவரின் அப்பாவான வினோத் ராஜும் ஒரு திரைப்பட நடிகர்.80களில் ரஜினி, கமல் படங்களில் இவரை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் சினிமாவில் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. அதே போல் தன் மகனுக்கு தன் நிலைமை வந்துவிடக் கூடாது என்பதற்காக படிப்பில் கவனம் செலுத்த வைத்தார். ஆனால் விதி யாரை விட்டது? சினிமா விக்ரமை தானாக இழுத்தது. ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தில் முதன் முதலாக விக்ரம் அறிமுகமானார்.
அதன் பின்னர் ஸ்ரீதர் இயக்கிய படம் ‘தந்து விட்டேன் என்னை’. இந்தப் படத்தின் இயக்குனர் பழம்பெரும் இயக்குனரான ஸ்ரீதர். ஆனால் இந்தப் படத்தில் புதுமுக நடிகரை வைத்து இயக்கவே ஆசைப்பட்டார் ஸ்ரீதர். இருந்தாலும் ஸ்ரீதரின் வளர்ச்சி, சிவாஜி, எம்ஜிஆரை வைத்து படம் எடுத்தவர், அவரின் இயக்கத்தில் எப்படியாவது ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் விக்ரம் தன் முதல் படத்தை பற்றி வாய் திறக்கவே இல்லையாம். அதை பற்றி ஸ்ரீதருக்கும் தெரியாதாம்.
ஒரு புதுமுக நடிகர் போலவே இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தாராம் விக்ரம். அதன் பிறகு படம் வெளியாகி அட்டர் ப்ளாப். மேலும் ஸ்ரீதருக்கு இந்தப் படம் தான் கடைசி படமும் கூட.
இதையும் படிங்க : மணிரத்னத்திடமே மணிரத்னம் யார் என்று கேட்ட டாப் நடிகர்… யார்ன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க!