சீயான் விக்ரம் என்பதை கெட்டப் விக்ரம் என்று சமீப காலமாக ட்ரோல் செய்து வருகிறார்கள் நடிகர் விக்ரமை. தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம். இவருக்கென்று தனி பாதை அமைத்துக் கொண்டு யாரையும் போட்டியாக நினைக்காமல் தன்னுடைய பாணியில் நடித்து மக்களை என்டர்டைன்மென்ட் படுத்தி வருகிறார் விக்ரம்.
இவர் ஹீரோவாக கடைசியாக நடித்த படம் கோப்ரா. அதில் ஏழு கெட்டப்புகளில் நடித்ததோடு மட்டுமில்லாமல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை தந்த படமாக கோப்ரா அமைந்தது. அதிலிருந்தே மிகவும் ட்ரோல் செய்யப்பட்ட நடிகராக மாறினார் விக்ரம். அதாவது கதை கேட்கிறாரோ இல்லையோ படத்தில் எத்தனை கெட்டப்புகள் என்றுதான் கேட்பார் போல என மிகவும் விமர்சனத்திற்கு ஆளானார் விக்ரம்.
இப்படி கெட்டப்புகளாலேயே பல கதைகளை கோட்ட விட்டிருக்கிறார் விக்ரம். இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்து வரும் தங்கலான் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் படத்தில் ஆதிவாசியாக கெட்டப் போட்டுக் கொண்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் திகைத்து இருக்கிறார் விக்ரம்.
கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த ஒரு உண்மையைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் தயாராகிக் கொண்டு வருகிறது. முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் 10 நாட்களே இன்னும் படப்பிடிப்புகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றது.
மேலும் இந்தப் படத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடிப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் இரண்டு வேடத்தில் நடிக்க வில்லையாம். மூன்று கெட்டப்புகளில் விக்ரம் வருவதாக கூறுகிறார்கள். இதை அறிந்த ரசிகர்கள் மீண்டும் அந்த கெட்டப் என்ற வார்த்தையை விட மாட்டார் போல விக்ரம் என இணையத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…