தான் மட்டும் நல்லா இருந்தா போதும்!.. தேசிய விருது கொடுத்த தயாரிப்பாளரை வேதனையில் சிக்க வைத்த விக்ரம்..
தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான கெட்டப்களால் வித விதமான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் நடிகர் விக்ரம். இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் மெனக்கிடும் பாடுகள் சொல்லமுடியாத அனுபத்தை தான் தந்திருக்கும். எங்கேயோ இருந்த விக்ரமிற்கு நடிகர் என்ற அந்தஸ்தை வாங்கி கொடுத்த படம் ‘சேது’.
இந்த படத்தின் மூலம் தான் பாலா இயக்குனராக அறிமுகமாகிறார். சேது படத்தை கந்தசாமி என்பவர் தான் தயாரித்தார். இவரது அண்ணன் பையன் தான் நடிகர் சசிகுமார். மேலும் சேது படத்தின் மூலம் சினிமாவில் நுழைகிறார்கள் சசிகுமாரும் அமீரும். இவர்கள் இருவரும் சேது படத்தில் பாலாவுக்கு உதவி இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள்.
இதையும் படிங்க : அண்ணே…உங்களுக்கு இந்தத் தங்கச்சி மேல இத்தனை பாசமா…?! கதறி அழுத மனோரமாவைத் தேற்றிய பிரபலம்..!!!
சேது படம் விமர்சன ரீதியாக நல்ல வெற்றிபெற்றாலும் ஏன் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தப் படமானாலும் வசூல் ரீதியாக சாதனை படைக்கவில்லை. காரணத்தை கூறிய படத்தின் தயாரிப்பாளரான கந்தசாமி சரியான விளம்பரம் பண்ண தெரியாமல் பல இடங்களில் தோற்றுப் போய்விட்டோம் என்று கூறினார்.
சொல்லப்போனால் படம் எடுத்ததன் மூலம் நிறைய நஷ்டங்களை தான் பெறமுடிந்தது என்று கூறினார். இந்த நிலையில் தன் சித்தப்பாவுக்காக சசிகுமார் படத்தை விளம்பர படுத்த போஸ்டர் அடிச்சு விளம்பரம் பண்ணலாம் என்ற யோசனையில் நடிகர் விக்ரமின் அம்மாவிடம் போய் கந்தசாமிக்கு தெரியாமல் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்.
அந்த பணத்தைக் கொண்டு வெளி விளம்பர போஸ்டர்கள் எல்லாம் அடித்து படத்தை விளம்பரபடுத்தியிருக்கிறார் சசிகுமார். ஒரு கட்டத்தில் கந்தசாமியின் அலுவலகத்திற்கு விக்ரம் மற்றும் அவரது அம்மா வந்தார்களாம். சசிகுமார் அம்மாவிடம் ஒரு லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார். அதை அம்மா திருப்பி கேட்கிறார்கள் என்று கூறினாராம்.
ஏற்கெனவே நஷ்டத்தில் இருக்கும் கந்தசாமி இதெல்லாம் எனக்கு தெரியாது என்று கூறியும் அதற்கு விக்ரம் ‘இல்ல அம்மா கோபப்படுவார்கள்’ என்று கூறினாராம். அதன் பிறகு ஒரு செக்கில் ப்ளேம் கையெழுத்து போட்டு தனியாக எழுதியும் விக்ரம் கையில் கொடுத்தனுப்பி சில நாள்கள் கழித்து பணம் வந்ததும் செக்கை வாங்கி பணத்தைக் கையில் கொடுத்து விட்டாராம் கந்தசாமி.
இதையும் படிங்க : ஃபாரின்லயும் நம்ம படம் சம்பவம் பண்ணனும்.. தயாரிப்பாளிடம் கண்டிஷன் போட்ட அஜித்..
இந்த சம்பவத்தை கந்தசாமி தெரிவித்து ஒரு வெற்றி படத்தின் மூலம் அமோக வாழ்க்கை வந்தும் அந்த படத்திற்காக ஒரு லட்சம் செலவு பண்ணால் தப்பு ஒன்றுமில்லையே. மேலும் விக்ரம் பழகுற வரைக்கும் இனிப்பா பேசுவார் அதன் பிறகு ஆட்டத்தை காண்பிச்சுருவாரு என்றும் கூறினார்.