Categories: Cinema News latest news

விக்ரம் நடிப்பில் வரிசை கட்டி நிற்கும் படங்கள்..! அந்த படமும் ரிலீஸா..? குதூகலத்தில் சீயான் ரசிகர்கள்..

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் போற்றப்படும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கெட்டப்பிலும் வித்தியாசமான கதைகளமும் கொண்டதாக இருக்கும். நடிப்பிற்காக தன்னையே வருத்திக் கொள்ள கொஞ்சம் கூட தயங்காதவராய் விளங்குபவர்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து இவரது நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா போன்ற படங்கள் வரிசையாக நிற்கின்றன. கோப்ரா படம் இந்த மாத இறுதியிலும் பொன்னியின் செல்வன் படம் அடுத்த மாத இறுதியிலும் ரிலீஸாக உள்ளன.

மேலும் தன்னுடைய கோப்ரா படத்திற்காக பல ஊர்களுக்கு சென்று புரோமோஷன் வேலைகளை பார்த்துக் கொண்டு வருகிறார் நடிகர் விக்ரம். இந்த நிலையில் ஏற்கெனவே சார்மிங் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற படமும் தயாராகி வருகின்றது.

இதையும் படிங்கள் : என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது…! கூட்டத்தில் நடிகர் விக்ரம் பேச்சு..

இதையும் படிங்கள் : சிம்புவின் கல்யாண விஷயத்துல கையை விரித்த டி.ஆர்…

இதற்கிடையில் இந்த படத்தை பற்றி சமீபத்தில் கௌதம் மேனன் பேசியிருந்தார். பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆவதால் டிசம்பர் மாத இறுதியில் துருவ நட்சத்திரம் படத்தையும் ரிலீஸ் செய்ய போவதாக கௌதம் கூறியிருந்தார். துருவ நட்சத்திரம் படத்தில் சிம்ரன், ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல நடிகர்கள் நடிக்கின்றனராம். துருவ நட்சத்திர படத்திற்கான டப்பிங் வேலைகள் போய்க் கொண்டிருப்பதாக இயக்குனர் கூறினார். அடுத்தடுத்து கல்லா கட்டப் போகிறது நடிகர் விக்ர்முக்கு…!

Published by
Rohini