முதியவர் சொன்ன கமெண்ட்!. தியேட்டரில் கண்ணீர்விட்ட சியான்!. அதிலிருந்து இப்படி ஒரு செண்டிமெண்ட்டா!..

Actor Vikram: தமிழ் சினிமாவில் தனது திறமையினால் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சீயான் விக்ரம். இவர் என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம் வர ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவரது திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றிப்படங்களாக அமையவில்லை.

இருந்தாலும் தனக்கும் சினிமாவிற்கும் உள்ள தொடர்பு விட்டு போகக்கூடாது என்பதற்காக மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். பல திரைப்படங்களில் பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தும் வந்தார்.

இதையும் வாசிங்க:தன் படத்தில் விஜய் படத்தை போட சொன்ன அஜித்!. இது புரியாம அடித்துக்கொள்ளும் ஃபேன்ஸ்..

இவ்வாறு இருந்த விக்ரமின் வாழ்வில் பெரிய விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து வெளிவந்த சீயான் விக்ரம் சேது திரைப்படத்தின் மூலம் திரும்பவும் சினிமாவில் நுழைந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு சினிமாவில் இவருக்கு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி தந்தது என்று கூறலாம்.

எந்தவொரு கதாபாத்திரத்திலும் நடிக்க யோசிக்கும் இந்த கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்க சம்மதித்தார். இதிலிருந்து இவர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தினை காணலாம். இப்படத்திற்கு பின் தில், விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இதையும் வாசிங்க:விஜய் ஷாருக்கான விட இவர்தான் எனக்கு ரொம்ப முக்கியம்… என்னப்பா அட்லி பொசுக்குனு இப்படி சொல்லிட்ட!…

அதன்பின் இவர் நடித்த திரைப்படம்தான் காசி. இப்படத்தினை இயக்குனர் வினயன் இயக்கியிருந்தார். கண் தெரியாதவர் போல் நடித்த இப்படம் இவருக்கு வெற்றியை தேடி தந்தது. இப்படத்திற்கு பின் இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

இவர் இப்படத்தினை சென்னை தி நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் முதல் நாள் பார்த்துள்ளார். அப்போது அங்கு இவருக்கு அருகில் ஒரு பெரியவர் இருந்துள்ளார். அப்போது அந்த பெரியவர் படத்தை பார்த்து கண்ணு தெரியாவிட்டாலும் இந்த தம்பி எவ்வளவு அழகாக நடித்துள்ளார் என கூறினாராம். உடனே அதை கேட்ட விக்ரமுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டதாம். அதிலிருந்து தான் எந்த படத்தில் நடித்திருந்தாலும் செண்டிமெண்டாக தனது முதல் நாள் முதல் காட்சியை இவர் அந்த தியேட்டரில்தான் பார்ப்பாராம்.

இதையும் வாசிங்க:இவங்கலாம் பண்ணும்போது நாம ஏன் பண்ணக்கூடாது!.. லோகேஷ் கனகராஜை சீண்டும் சந்தானம்!..

Related Articles
Next Story
Share it