ஒரு வேளை மன்சூர் அலிகானுக்கு சிஷ்யனாக இருப்பாரோ..? கோவையில் ரகளை செய்த நம்ம சீயான்...
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரின் நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா என இரு பெரும் படங்கள் வரிசைகட்டி காத்து கொண்டிருக்கின்றன. கோப்ரா இந்த மாத இறுதியிலும் பொன்னியின் செல்வன் படம் அடுத்த மாத இறுதியிலும் திரையரங்குகளை அலங்கரிக்க போகின்றன.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி, ஆகியோர் நடிப்பில் தயாரான படம் தான் கோப்ரா.இந்த படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் புரோமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விக்ரம். இதன் முதற்கட்டமாக திருச்சியில் ஆரம்பித்த பயணத்தை மதுரை, கோயம்புத்தூர், மதுரை என மாநிலத்தின் பல்வேறு ஊர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து படத்தை பற்றிய் அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்.
இன்று கோவையில் ஒரு கல்லூரிக்கு சென்று ரசிகர்களை சந்தித்தார். அப்போது ஒரு ரசிகை ஏகப்பட்ட படங்களில் பல்வேறு கெட்டப்புகளில் நடித்த நீங்கள் இந்த படத்திற்கும் மற்ற படத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? என கேட்க அதற்கு விக்ரம் வாவ்.. மிகவும் அருமையான ஃபேன் என மேலே சுற்றிக் கொண்ட ட்ரோன் கேமராவை பார்த்து ஆங்கிலத்தில் கூறி நகைத்தார்.
அதை பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாக உட்கார ஓ ஃபேன் இல்லையா? என கூறி பதில் சொல்ல ஆரம்பித்தார். இதே மனப்பாங்கு கொண்டவர் நடிகர் மன்சூர் அலிகான். அவரிடன் கேள்வி கேட்கும் போது இலையை பறித்து பீபீ ஊதுவது, வேறு எதாவது பேசிக் கொண்டு இருப்பது என இருக்கும். அதே போல் தான் இன்று விக்ரமை பார்க்கும் போது தெரிகிறது என ரசிகர்கள் உணர்ந்தனர்.