Vikram: பிரம்மாண்டத்த நம்புனா பரலோகம்தான்! அடுத்த பட இயக்குனரை லாக் செய்த விக்ரம்.. விவரம்தான்

by Rohini |
vikram
X

vikram

Vikram: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம் .கமலுக்கு அடுத்த படியாக விதவிதமான கெட்டப்களில் நடித்து மக்களின் அபிமானங்களை பெற்றவர் விக்ரம். தமிழ், மலையாளம் ,தெலுங்கு என ஆரம்பகாலங்களில் பல படங்களில் நடித்து தொடர் தோல்வியை தழுவி அதன் பின் வந்த சேது படத்தில் ஹீரோவாக நடித்து சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர்.

சேது படம் பாலாவுக்கு முதல் படம். அந்தப் படமும் விக்ரமுக்கு வாழ்வா சாவா போராட்டமாகத்தான் இருந்தது. ரிலீஸான முதல் வாரத்தில் சரியான வரவேற்பை பெறவில்லை. ஆனால் போக போக மக்களிடம் சரியான வரவேற்பை பெற்றது சேது படம் .அந்தப் படம் தான் விக்ரமுக்கும் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஆரம்ப காலங்களில் தோல்வி நடிகர் என்ற ஒரு பெயர் இருந்தது.

இதையும் படிங்க: ரோகிணிக்கு விஜயா வைத்த சூப்பர் செக்.. ராதிகாவை விளாசிய இனியா.. தங்கமயிலின் திட்டம்!..

சாமி. தூள், அந்நியன் போன்ற படங்கள் அந்த பெயரை சுக்கு நூறாக்கியது. சேது படத்திற்கு முன்பு வரை விக்ரம் நடித்த எந்தப் படங்களும் ஓடவில்லை. ஆனால் சேதுவுக்கு பின் தில், காசி, ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அருள் போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வந்தார். இந்த நிலையிலும் ஒரு சில தோல்விப் படங்களையும் கொடுத்தார். அதாவது சாமுராய், கிங் மற்றும் காதல் சடுகுடு போன்ற படங்கள்.

தற்போது வீரதீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். சமீபகாலமாக பெரிய பட்ஜெட் உள்ள படங்கள் மக்களை அந்தளவு ஈர்ப்பதில்லை. ரசிகர்களும் இப்போது பெரிய ஹீரோக்களை நம்பி இல்லை. நல்ல கதைக்களம் கொண்ட கதையாக இருந்தால் மட்டுமே நம்பி உள்ளே வருகிறார்கள். அந்த வகையில் லப்பர் பந்து, வாழை போன்ற படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட் உள்ள படங்களை ஓட ஓட விரட்டியது.

vikram1

vikram1

இதையும் படிங்க: ஐஸ்வர்யா தனுஷால் என்னை பழி வாங்கிய பிருந்தா மாஸ்டர்… ஆர்ஜே பாலாஜி கொடுத்த ஷாக்

அதனால் பெரிய ஹீரோக்களும் இப்போது உஷாராகிவிட்டார்கள். அந்த வகையில் விக்ரமும் இப்போது வீர தீர சூரன் படத்திற்கு பிறகு இரண்டு இயக்குனர்களிடம் கதை கேட்டிருக்கிறாராம். பார்க்கிங் பட இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் மகாவீரன் படத்தின் இயக்குனரான மடோன் அஸ்வின் ஆகியவர்களிடம் கதை கேட்டு விக்ரமுக்கு பிடித்துவிட்டதாம். அதனால் வீர தீர சூரன் படத்திற்கு பிறகு இந்த இரு இயக்குனர்களில் ஒருவருடன் விக்ரம் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Next Story