உச்சிக்கு வந்தால் இந்த உலகம் நம்மை தீட்டி தீர்க்கும் – சர்ச்சையை கிளப்பிய விக்ரம்..!

vikram
வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடிக்கும் தமிழ் கதாநாயகர்களில் விக்ரமும் ஒருவர். அவர் நடித்த படங்களில் அவருக்கு முக்கியமான திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் சேது. அந்த படத்திற்கு பிறகு வித்தியாசமான கதைக்களத்தை அதிகமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விக்ரம்.

Vikram
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் வெகுவாக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வாய்ப்பை பெற்று வருகிறார் விக்ரம். தற்சமயம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தங்கலான் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானபோதே மக்கள் மத்தியில் ஒரு அலையை கிளப்பியது. பழங்குடியின மக்களின் தோற்றத்தில் அதில் விக்ரம் இருந்தார். தற்சமயம் தங்கலான் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடந்துக்கொண்டுள்ளன.

vikram tweet
இந்த நிலையில் விக்ரம் தனது டிவிட்டர் பக்கத்தில் சூரியன் உதிக்கும் அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்.. உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும்” என பதிவிட்டு அதற்கு அருகில் தங்கலான் படத்தின் ஹாஸ்டேக்கை பயன்படுத்தியுள்ளார்.
ஒருவேளை தங்கலான் படத்தின் கதையை குறிக்கும் விதமாக இந்த வசனத்தை விக்ரம் பதிவிட்ட்டிருப்பாரோ? என நெட்டிசன்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகின்றன.