vikram
Actor Vikram Prabhu: தமிழ் சினிமாவில் ஒரு வளரும் நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம் பிரபு. தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்பட்ட ஒரு நடிகரின் குடும்பத்தில் இருந்த வாரிசுதான் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தளவுக்கு பேர் எடுத்தாரா என்றால் இல்லை.
சிவாஜியின் புகழை யாரும் தொட முடியாது என அனைவரும் அறிவோம். ஆனால் அவரை தொடர்ந்து அவர் குடும்பத்தில் இருந்து வந்த அடுத்த வாரிசான பிரபு ஓரளவு உச்சம் தொட்ட நடிகராக வளர்ந்தார். அவருக்கு என பல ரசிகர்கள் இருந்தார்கள். சினிமாவில் நடிக்கும் வரை பிரபுவின் மார்கெட் எந்த விதத்திலும் குறையாத அளவுக்குத்தான் இருந்தது.
இதையும் படிங்க: பாசமலர் படத்தில் நடித்ததால் சாவித்ரிக்கு வந்த நஷ்டம்!… இந்த ரசிகர்களே இப்படித்தான்!…
ஆனால் பிரபுவின் வாரிசான விக்ரம் பிரபுவுக்கு முதல் படமான கும்கி பெரிய அளவில் ஹிட்டானாலும் அதனை தொடர்ந்து பல ஹிட்களை கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் பெரிய அளவில் அவரின் படங்கள் பேசப்படவில்லை. கடைசியாக விக்ரம் பிரபுவுக்கு பெரிய பாராட்டை பெற்றுக் கொடுத்த படமாக டாணாக்காரன் படம் மட்டும்தான் அமைந்தது.
இந்த நிலையில் விக்ரம் பிரபுவை வைத்து வெள்ளக்கார துரை என்ற படத்தை எடுத்த எழில் அதில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை கூறினார். படம் முழுவதும் எடுத்த நிலையில் அதை போட்டு பார்த்த இயக்குனர் எழிலுக்கே படம் பிடிக்கவில்லையாம். உடனே படத்தில் வேலை பார்த்த அனைவரையும் சகட்டுமேனிக்கி திட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க: வாரிசு நடிகரை இரண்டாம் திருமணம் செய்ய இருக்கும் சமந்தா?… யார் என்பதுதான் ஹைலைட்டே..!
படத்தின் எடிட்டரை அழைத்து தேவையில்லாத சீன்களை எல்லாம் வெட்டி எடுக்க சொல்ல ஒரு மணி நேர காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாம். இதில் படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் முதலிலேயே வெளியிட்டதால் எப்படியாவது அந்த தேதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார்கள்.
வெட்டி எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு பதிலாக சில ஆக்ஷன் சீன்கள், காமெடி சீன்கள் என சேர்க்க படத்தின் எடிட்டரோ ‘எம்ஜிஆர் சிவாஜி பாணியில் படத்தின் காட்சிகளை சேர்த்திருக்கிறீர்களே?’ என எழிலிடம் கூறினாராம். மீண்டும் ஒரு பதினெட்டு நாள்கள் ரீ சூட் எடுத்து படத்தை போட்டு பார்த்ததில் படக்குழு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் படம் ரிலீஸாகி பெரிய அளவில் ஹிட்டும் ஆனது என இயக்குனர் எழில் கூறினார்.
இதையும் படிங்க: நீ முதல்ல ஆஸ்கார் வாங்கு.. உன்ன மீட் பண்றேன்!.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கண்டிஷன் போட்ட பிரபலம்
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…