‘தங்கலான்’ படத்தின் சுவாரஸ்யமான அப்டேட்டை லீக் செய்த விக்ரம்! சோன முத்தா போச்சா?

Published on: November 2, 2023
vikram
---Advertisement---

Thangalan Movie: சமீபத்தில் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாரான தங்கலான் திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை வியப்படைய வைத்திருக்கிறது. பொன்னியின் செல்வனுக்கு பிறகு கடின உழைப்பை போட்டு விக்ரம் நடித்த படம்தான் தங்கலான். இந்த படம் கே.ஜி.எஃபில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகும் படம் என்று ரஞ்சித் கூறியிருந்தார்.

படத்தின் டீஸர் வெளியான பிறகு இதுவரை நடித்த படங்களிலேயே விக்ரம் இந்தப் படத்தில் தான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருப்பார் என்ற எண்ணத்தை வரவழைத்திருக்கிறது. விக்ரமும் செய்தியாளர்கள் பேட்டியில் கூறும் போது ஐ, பிதாமகன், அந்நியன், ராவணன் போன்ற படங்களில் கஷ்டப்பட்டது இந்த படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அந்த படங்களில் வெறும் 3 சதவீதம் தான் கஷ்டப்பட்டிருப்பேன் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க: விஜய்க்கு ‘இளைய தளபதி’ பட்டத்தை கொடுத்தவர் யார் தெரியுமா?!.. ஒரு ஆச்சர்ய தகவல்!…

படம் ஜனவரி 26 அன்று திரைக்கு வரவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. படத்திற்கு கூடுதல் பலமே ஜீ.வி.பிரகாஷ் இசையில் அமைந்த ரீ ரிக்கார்டிங்தான். டீஸரிலேயே இசையை தெறிக்க விட்டிருக்கிறார். இன்னொரு தேசிய விருதுக்கும் ஜீ.வி, தயாராகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எப்படி என் இசையை பாராட்டினீர்களோ அதை போல் இந்தப் படத்திலும் என்னை பாராட்டுவீர்கள் என்று ஜீ.வி. கூறினார். மேலும் இதில் அரசியல் எதுவும் இருக்கிறதா என்ற கேள்விக்கு இந்தப் படத்தோட பெயரே அரசியல்தான் என்று சொல்லி செய்தியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார் பா.ரஞ்சித்.

இதையும் படிங்க: தலயே சும்மா இருக்கும் போது வாலுக்கு இந்த வாய் தேவையா..! பேச்சு தாங்க முடியாமல் ரத்னா எடுத்த திடீர் முடிவு..!

இந்த நிலையில் விக்ரம் ஒரு சீக்ரெட்டை செய்தியாளர் பேட்டியில் பளிச்சென்று சொல்லியிருக்கிறார். அதாவது இந்தப் படத்தில் எனக்கு வசனமே இல்லை என்றும் பிதாமகன் மாதிரிதான் இந்தப் படத்திலும் என்று சொல்லியிருக்கிறார்.

முக்கியமான தகவலாக இருந்தாலும் படத்திற்கு இது சுவாரஸ்யமான தகவலும் கூட. இதை இவ்வளவு ஓப்பனாக சொல்லிவிட்டாரே விக்ரம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரவிக்கு செம டோஸ் விட்ட முத்து… மீண்டு வந்த அண்ணாமலை..! மாமனாரை பார்த்த மீனா..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.