கணக்கு டீச்சரா இருந்துட்டு உனக்கு எதுக்கு மூணு ஹீரோயின்...? விக்ரமை கலங்கடித்த பத்திரிக்கையாளர்...!
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து முடித்திருக்கிறார். கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்க ஏஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இந்த படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் நடிகர் விக்ரம். தமிழ் நாட்டில் மதுரை, திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களுக்கு சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இந்த நிலையில் புரோமோஷனுக்காக ஹைதராபாத்துக்கு படக்குழுவுடன் சென்றிருக்கிறார் விக்ரம்.
இதையும் படிங்கள் : பெண்களை சித்ரவதை செய்யும் செல்வராகவன்.. வெளியான ஷாக்கிங் வீடியோ… அடுத்த சம்பவம் விரைவில்…
ஹைதராபாத்தில் பத்திரிக்கையாளரை சந்தித்த இவர் நேருக்கு நேர் உரையாடினார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் விக்ரமிடம் கோப்ரா படத்தில் நீங்கள் கணக்கு டீச்சரா? என கேட்டார். ஆம் என விக்ரம் கூற அப்படி இருக்கையில் எதுக்கு மூன்று ஹீரோயின் என அந்த பத்திரிக்கையாளர் கேட்டார்.
அதை கேட்டதும் விக்ரம் எதுக்குனா கணக்கு சொல்லி தரதான் என தனக்கே உரித்தான பாணியில் கிண்டலாக பதில் கூறினார். மேலும் ஏன் கணக்கு டீச்சர்னா கல்யாணம் பண்ணிக்க கூடாதா? லவ் பண்ணக்கூடாதானு திரும்ப அந்த பத்திரிக்கையாளரிடம் கேட்க அதற்கு அந்த பத்திரிக்கையாளர் அமைதியானார்.