எப்படி சார் உங்களால முடியுது? அதே எனர்ஜி...அதே இன்வால்வ்மெண்ட்? விக்ரம் வெற்றி குறித்து விக்ரம் பளீர் பேச்சு
தமிழ்சினிமாவில் வித்தியாசமாக படத்துக்குப் படம் வித விதமாக கெட் அப்புகளுடன் நடிப்பவர்கள் என்றால் அது இரண்டே இரண்டு பேர் தான். ஒன்று கமல்ஹாசன். மற்றொன்று விக்ரம்.
இவர்களில் கமல் கடைசியாக நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்று அனைவரது புருவத்தையும் உயர்த்தியது. தற்போது வெளியாகி உள்ள கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகெங்கிலும் உள்ள உச்ச நடிகர்களையும் இந்த வெற்றி அசர வைத்து விட்டது. அதற்கு நடிகர் விக்ரமே சாட்சி. விக்ரம் பட பிரம்மாண்ட வெற்றி குறித்தும், தற்போது வரை கமலின் எனர்ஜியான நடிப்பு குறித்தும் அவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.
எனக்கு ஒரு கதை ரொம்ப நாளா ஓடிக்கிட்டு இருந்துச்சு அதைப் பற்றி இங்க சொல்லணும். கமல் சார் இங்க இருக்கறதனால இது ஒரு நல்ல வாய்ப்பா அமைஞ்சிருக்கு. எங்க தாத்தா பேரு ஜோதிநாயகம். அவரு பரமக்குடில வந்து ஒரு பள்ளியில தலைமை ஆசிரியரா இருந்தாரு. அவரு இருக்குற ஸ்கூல்ல மூணு பசங்க படிக்க வாராங்க.
அவங்க சந்ரு, சாரு, நளினி. அவங்களுக்கு ஒரு குட்டி தம்பி இருந்தாப்லயாம். அவரோட பேரு பார்த்தசாரதி. அவரு வந்து சின்ன வயசால படிக்க முடியல. ஆனா விளையாடறதுக்கு அப்பப்போ வருவாருன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதுக்கு அப்புறம் அவங்களுக்கு படிக்கற வயசு வரும்போது எல்லாருமே மெட்ராஸ்க்கு வந்துட்டாங்க அப்படின்னாரு.
சரி...இப்ப இதுல என்ன அப்படின்னா...அப்ப தான் எங்க தாத்தா ஒரு பிட்ட போட்டாரு. சொன்னாரு. அந்த சின்னப் பையன் இல்ல. ஆமா...பார்த்தசாரதி...அவரு இப்போ பெரிய நடிகரா இருக்காருன்னாரு.
தாத்தா பார்த்தசாரதிங்கற நடிகர் எனக்குத் தெரிஞ்ச கொஞ்ச நஞ்ச சினிமால அப்படி யாரும் இல்லையேன்னேன். இல்லே...அவருக்கு இன்னோரு பேரு இருக்கு...அப்படின்னாரு. என்ன பேரு அப்படின்னேன். கமல்....அப்படின்னாரு. கமல்....நம்ம கமல் சார்...கமலா அப்படின்னேன். ஆமாடா....கமல்ஹாசன்னாரு.
அப்பவே முடியல என்னால...அதுவும் எங்க ஊரு...எங்க ஸ்கூல்ல இவங்களாம் வந்து படிச்சாங்கன்னு நினைக்கும் போது ரொம்ப ரொம்ப பெருமையா எனக்கு இருந்துச்சு. எனக்கு என்னன்னா அப்பக்கூட படம் பார்க்கும் போது அப்பா மனுஷன் பின்றாருப்பான்னு நினைச்சிருக்கேன்.
kamal
ஆனா 10 வருஷம் இல்ல...20 வருஷம் இல்ல...30 வருஷம் இல்ல...40 வருஷத்துக்கு அப்புறமும் இப்பவும் விக்ரம் பார்க்கும்போது அப்பா பின்னிட்டாரு.
எப்படி சார் உங்களால முடியுது? இப்பவும் வந்து அதே எனர்ஜியோட இன்வால்மண்ட்டோட பெரிய அளவில் ஹிட் கொடுக்க முடியறது? தொடர்ந்து இதே போல திரையுலகிற்கு பெரிய அளவிலான வெற்றிப்படங்களைத் தர வேண்டும். இப்பல்லாம் படங்கள் வந்து நல்லா ஓடணும். ஆனா நல்ல ஓடுனா தான் ஒரு பணப்புழக்கம் இருக்கும். நிறைய தயாரிப்பாளர்கள் படங்களும் எடுப்பாங்க. நல்ல படங்களும் எடுப்பாங்க.