திடீரென வைரலாகும் விக்ரமின் ட்விட்டர் பதிவு!.. தோனியை விமர்சித்த சீயான்..

by Rohini |   ( Updated:2023-04-13 06:18:09  )
dhoni
X

dhoni

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் மிரள வைத்தவர். விதவிதமான கெட்டப்களில் வந்து சினிமாவையே மிரட்டியவர். கமலுக்கு அடுத்தபடியாக வெவ்வேறான கெட்டப்களில் தனது தோற்றத்தை மாற்றி நடிக்க கூடிய நடிகராக
விக்ரம் இருக்கிறார்.

சினிமாவிற்காக தன் உடலையும் வருத்திக் கொள்வதில் இவர் தயங்கியதில்லை. பொன்னியின் செல்வனில் ராஜ ராஜ சோழனாக வந்து மக்களை அசர வைத்திருக்கிறார் விக்ரம். அடுத்ததாக துருவ நட்சத்திரம் படத்தின் ரிலிஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் சென்னை அணியின் கேப்டன் தோனியை பற்றி தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார். நேற்று சேப்பாக்கத்தில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதியது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 175 ரன் எடுத்து 176 ரன் எடுத்தால் வெற்றி என சென்னை அணிக்கு இலக்கு வைத்தது. அதனை தொடர்ந்து ஆடிய சென்னை அணி வரிசையாக விக்கெட்களை கொடுத்து கடைசியாக களத்தில் தோனியும் ஜடேஜாவுன் ஆட்டத்தில் இருந்தனர்.

தோற்று விடுவோம் என்ற நிலையில் இருந்த சென்னை அணியை தனது அபார ஆட்டத்தால் ஓரளவுக்கு வெற்றி பெருமூச்சு விட வைத்தார் தோனி. அந்தப் பக்கம் ஜடேஜாவும் ஓரளவுக்கு அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார். ஒரு பக்கம் வெற்றியா இல்லை தோல்வியா? என ரசிகர்கள் பெரும் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

ஒரே பந்தில் 6 ரன்கள் வேண்டும் என இருந்த நிலையில் ஃபீல்டில் தோனி நிற்க கண்டிப்பாக சிக்ஸ் அடிப்பார் என நினைத்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியுடன் சென்னை அணி மோதியது.

இதையும் படிங்க : தமிழ் சினிமாவில் கதாநாயகனான முதல் இயக்குனர்!.. எல்லாத்துக்கும் ஆணிவேரே இவர்தானா!..

ஆனாலும் எப்படியாவது சென்னை அணியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் நேற்று தோனியின் முகத்தில் நன்றாகவே தெரிந்தது. அதற்கேற்றாற் போல தனது சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இதை குறிப்பிட்டு தான் நடிகர் விக்ரம் ‘ நீங்கள் எப்போதும் எங்களை ஆச்சரியத்தில் வியக்க வைக்க தவறியதில்லை மகி’ என அந்த பதிவில் குறிப்பிட்டு தோனியுடன் விக்ரம் இருக்கும் புகைப்படத்தையும் சேர்ந்து பதிவிட்டிருந்தார்.

Next Story