என்கிட்ட கதையே இல்ல.. எடுக்கச் சொன்னாங்கனு எடுத்தேன்! விக்ரம் படத்தோட தோல்விக்கு இதுதான் காரணமா?
தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். சீயான் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ஒரு மகத்தான நடிகர். சினிமாவிற்காகவும் நடிப்பிற்காகவும் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர். விதவிதமான கெட்டப்களில் அனைவரையும் மிரட்டியவர்.
இவரின் நடிப்பில் எப்பேற்பட்ட நல்ல நல்ல படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கின்றன. ஒரு ஜோவியலான நடிகரும் கூட. ரொம்பவும் கூலான மனிதர் விக்ரம். அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருகிறார். இவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்த படம் சேது திரைப்படம். அந்தப் படத்திற்கு பிறகு வெளிவந்த படம்தான் ‘சாமுராய்’.
அந்த படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கினார். இவர் இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக இருந்தவர். உண்மையிலேயே சாமுராய் படத்திற்கு முன்பு பாலாஜி சக்திவேலிடம் இருந்தது மூன்று பெண்களை அடிப்படையாக கொண்ட ஒரு கதையாம். அந்த நேரத்தில் ஆர்.பி.சௌத்ரி புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருந்தாராம். அதை பயன்படுத்திக் கொண்டு பாலாஜி சக்திவேலும் இந்தக் கதையை எடுத்துக் கொண்டு போனாராம்.
கதையை கேட்டதும் சௌத்ரி ‘என்னய்யா உன்கிட்ட இருந்து பெரிய ஆக்ஷன் படமாக எதிர்பார்க்கிறேன், நீ என்னான்னா ஹீரோவே இல்லாத கதையை கொண்டுவர’ என்று மறுத்து விட்டாராம். ஏனெனில் சங்கரிடம் உதவியாளராக இருந்ததனால் பெரிய பட்ஜெட் படங்களையே இவரிடம் எதிர்பார்த்திருக்கின்றனர். அதன் பிறகு தான் விக்ரமை வைத்து சாமுராய் கதையை உருவாக்கியிருக்கிறார். அதுவும் முதலில் உருவாக்கிய அந்த மூன்று
ஹீரோயின்கள் சம்பந்தப்பட்ட கதையில் இருந்து கொஞ்சம் கொஞ்ச கதைகளை எடுத்து சாமுராய் படத்தோடு மிக்ஸ் பண்ணி எடுத்தேன் என்று கூறினார்.
மேலும் ‘என்கிட்ட ஏதோ ஒரு குழம்பு, கூட்டு என்றுதான் இருந்தது, ஆனால் பிரியாணி வேண்டும் என்று சொன்னார்கள், அதனால்தான் எனக்கு தெரிந்த பிரியாணியை செய்து கொடுத்தேன்’ என்று சாமுராய் படத்தை பற்றி பாலாஜி சக்திவேல் கூறினார். ஆனால் அந்தப் படம்ஒரு சில பேருக்கு பிடித்திருந்தது. ஒரு சில பேருக்கு பிடிக்காமல் போனது. ஆனால் விக்ரம் இந்த படத்தை மிகவும் லவ் பண்ணி நடித்தார் என்று பாலாஜி சக்திவேல் கூறினார். படம் என்னவோ சுமாராக இருந்தாலும் இன்று வரை விக்ரம் இந்தப் படத்தை தான் ஒரு பெரிய படமாக கருதுகிறார் என்றும் பாலாஜி கூறினார்.