திகிலூட்டும் விஜயின் மறுபக்கம்!.. அண்ணனின் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த தம்பி..

by Rohini |
vijay
X

vijay

தமிழ் சினிமாவில் இன்று உச்சம் தொட்ட நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். இவரின் வளர்ச்சியை கண்கூடாக பார்த்தவர்கள் பிரமிப்பில் தான் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் சினிமாவில் நுழையும் போது ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானார்.

அவரின் தோற்றம், நிறம் ஆகியவற்றை வைத்தே பல பத்திரிக்கைகளில் விமர்சனங்கள் எழுந்தன. அதனால் விஜய் சில சமயங்களில் மனதளவில் வேதனை பட்டதும் உண்டு. ஆனால் அதை கொஞ்சம் கூட பொறுட்படுத்தாமல் தன் கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் இன்று ஒரு வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

vijay1

vijay1

இந்த நிலையில் விஜயின் உறவுக்காரரும் நடிகருமான விக்ராந்த் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் விஜயை பற்றி சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் விஜயின் தம்பியான விக்ராந்திற்கு விஜய் சினிமா வகையில் எந்த உதவியும் பண்ணுவதில்லை என்ற விமர்சனங்களும் வந்தன.

ஆனால் விக்ராந்த் கூறும் போது ‘ நான் ஓரளவுக்கு சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கான கிரெடிட்ஸ் என் அண்ணா விஜயை சேரும்’ என்று கூறியிருந்தார். மேலும் அவர் கூறும் போது அவர்கள் வீட்டின் பெருமையே விஜய் தானாம். மேலும் விஜய் வீட்டில் எப்பொழுது ஒரு பழைய பத்திரிக்கை இருக்குமாம்.

vijay2

vikranth

அந்த பத்திரிக்கையில் அந்தக் காலகட்டத்தில் விஜயை பற்றி கேளிக்கையான விமர்சனங்களை எழுதியிருப்பார்கள். அதை அப்படியே வைத்திருக்கிறாராம். அதில் ‘இவன் எல்லாம் என்ன மூஞ்சினு சினிமாவில் நடிக்க வந்திருக்கான்? ஒரு இயக்குனர் பையன் என்பதற்காக இந்த மூஞ்சியை தியேட்டர்ல போய் பாக்கனுமா?’ என்று அந்த பத்திரிக்கையில் இருக்கிறதாம்.

இதையும் படிங்க : இதுக்கெல்லாம் கமிஷன் அடிச்சா சினிமா எப்படி விளங்கும்!.. அட்லியை பொளந்துகட்டிய கே.ராஜன்…

இந்த செய்தி வெளியான அடுத்த 20 வருடத்தில் அதே பத்திரிக்கை விஜயை பற்றியும் அவரது வளர்ச்சியை பற்றியும் பெரிய கட்டுரையையே எழுதி வெளியிட்டனராம். அந்த பத்திரிக்கையையும் விஜய் வைத்திருக்கிறாராம். இதை விக்ராந்த் கூறும் போது இந்த இரு செய்திகளை பார்த்து பார்த்து தான் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

Next Story