கை கொடுத்து தூக்கிவிட்டா காலை வாரி விட்டாங்க! விமல் சொன்ன நடிகர் இவரா?
Actor Vimal: களவாணி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விமல். ஹீரோவாக நடிப்பதற்கு முன்னரே ஏகப்பட்ட படங்களில் ஒரு சைடு ஆக்டராக நடித்திருக்கிறார். விஜயுடன் இணைந்து கில்லி படத்தில் ஃபிரண்ட்ஸ் கேங்கில் ஒருவராக நடித்திருப்பார் விமல். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இந்த தமிழ் சினிமாவில் வளர்ந்து நிற்கிறார் விமல்.
இவர் பெரும்பாலும் எதார்த்தமுள்ள கதைகளில் நடித்து தனக்காக ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஹியூமர் சென்ஸ் அதிகம் உள்ளவரும் கூட. கலகலப்பு படத்தில் இவரின் காமெடியான லூட்டி இன்று வரை மக்களால் ரசிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: எங்கே இருக்கிறார் விஜே பிரியங்கா.. அவர் தற்போதைய நிலை என்ன?
விமலை பொறுத்தவரைக்கும் கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவர். இவருடன் சேர்ந்து விதார்த் , விஜய்சேதுபதி என இன்று முன்னனி நடிகர்களாக இருக்கும் சில பேர் கூத்துப்பட்டறையில் இருந்து தான் வந்தவர்கள். இடையில் விமலுக்கு படங்கள் வாய்ப்பே இல்லாத நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விலங்கு என்ற வெப் சீரிஸில் நடித்து மிகப்பெரிய் வெற்றியை கொடுத்தார்.
அந்த சீரிஸ் மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார் விமல். இப்போது கூட போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். சார் என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்தான் நடந்தது.
இதையும் படிங்க: மணிமேகலை சொல்றது உண்மைதான்… சக ஆங்கர் ரக்ஷன் சொல்வது என்ன?
அந்த விழாவிற்கு விஜய்சேதுபதி , வெற்றிமாறன் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய விமல் அவருக்கு நடந்த பல சம்பவங்களை கூறினார். அதில் நான் எத்தனையோ பேரை கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறேன். அதில் ஒரு இரண்டு பேர் என் காலை வாரி விட்டார்கள் என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த பல பேர் அது சிவகார்த்திகேயனை சொல்கிறார் விமல் என கூறி வருகிறார்கள். ஏற்கனவே விமலும் சிவகார்த்திகேயனும் இணைந்து ஒரு படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்குள் என்ன நடந்தது என தெரியவில்லை. இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் அனைவரும் சிவகார்த்திகேயன் தான் என கூறுகிறார்கள்.