சினிமா மோகத்தால் கிடைத்த கௌரமான வேலையை உதறிய வினுசக்கரவர்த்தி!.. அவருக்குள் இருந்த நிறைவேறாத ஆசை எதுனு தெரியுமா?..

by Rohini |
vinu_main_cine
X

vinuchakkaravarthy

மதுரை மண்ணுக்கு சொந்தக்காரரான வினுசக்கரவர்த்தி தன்னுடைய பள்ளி, கல்லூரி படிப்பை சென்னையிலேயே படித்து முடித்து காவல்துரையில் சேர்ந்தார். பின்னர் தெற்கு ரயில்வேயில் உயர் அதிகாரியாக பொறுப்பேற்று சிலகாலம் பணிபுரிந்தார். அதன் பின் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் அந்த வேலையை ராஜினாமா செய்து நாடகங்களை எழுத தொடங்கினார்.

vinu1_cine

vinuchakkaravarthy

பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் தான் வினு சக்கரவர்த்திக்கு ஆஸ்தான குரு. இவருக்கு மட்டுமில்லை இயக்குனர் பாரதிராஜாவுக்கும் புட்டண்ணாவுக்கு சிஷ்யனாக இருந்தார். தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 1000 படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தர் வினுசக்கரவர்த்தி.

vinu2_cine

vinuchakkaravarthy

இவருக்கு இன்னொரு பெருமை என்னவென்றால் 80, 90களில் தமிழ் சினிமாவையே தன் கட்டுக்கோப்பில் வைத்திருந்த கனவுக்கன்னி சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்தவரும் வினுசக்கரவர்த்தி தான். ஏராளமான படங்களும் கதை எழுதியுள்ளார். இவர் நடித்த படங்களிலேயே அண்ணாமலை, அருணாச்சலம், குருசிஷ்யன், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

ரஜினிக்கு நெருக்கமானவராகவும் பிடித்த நடிகராகவும் விளங்கினார் வினுசக்கரவர்த்தி. இப்படி 1000 படங்களில் தான் நடித்திருந்தாலும் எப்படியாவது ஒரு படத்தை இயக்கி தீர வேண்டும் என்ற அலாதி ஆசையில் இருந்திருக்கிறார் வினு. ஆனால் கடைசி வரை அது நடக்காமல் போய்விட்டது. இதுவே அவரது நிறைவேறாத ஆசை என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.

Next Story